எலான் மசுக்(Elon Musk)

எலன் மசுக்(Elon Musk)-செவ்வாய் கோளின் குடிமகன்


                          நாம் சிறு வயதில்  நிலாவை பார்த்து கனவு கண்டது நினைவுள்ளதா? நிலாவில் பாட்டி ஒருவர் உள்ளார் என்றும் அங்கே வடை சுடுகிறார் என்றும் எத்தனை வடைகளை கேட்டு இருப்போம்.பின்,நிலாவில் மனதின் கால் பதித்த பிறகு அது எல்லாம் கட்டு கதை என்றறிந்தோம்.இதே போல் நாம் வளரும் போது செவ்வாய் கோள்  பற்றி பல கதைகள் கேட்டு இருப்போம்.அந்த கதைகளை பற்றி பேச அல்ல இந்த பதிவு.அனால் நம்மை பேச வைத்த அந்த செவ்வாய் கோளுக்கு  விரைவில் நாம் எலன் மசுக்(Elon Musk) பயணம் செய்ய உள்ளோம்.நான் கூறுவதும் கதை என்று நினைக்க வேண்டாம்.முற்றிலும் உண்மையே இது.செவ்வாய் கோளுக்கு  செல்வதற்கான ஆயத்த பணிகளையும் அங்கு அமைய போகும் நகரையும் வடிவமைத்து அதை பற்றி பேசுவதோடு நில்லாமல் உலகில் உள்ள விண்வெளி பயண பந்தயத்தில் முன்னணியில் நிற்கிறார் நம் நாயகன் எலன் மசுக் (Elon Musk).

elon musk க்கான பட முடிவு
Source:Flickr

யார் இந்த  எலன் மசுக்(Elon Musk ):

யார் அவர்? என்ன செய்கிறார்? எங்கு உள்ளார்?   எலன் மசுக்   பற்றி  சிறிய கட்டுரை

                      செவ்வாய் கோளுக்கு  விரைவில் செல்ல ஆயத்தம் ஆகி வரும் எலன் 1971-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரிட்டோரிய நகரில் பிறந்தவர்.சிறு வயது முதலே உள்முகசிந்தனையாளரான எலன் புத்தகங்களையே தன் நண்பர்களாகவும் எல்லாமாகும் ஆக்கி கொண்டார்.தன்னுடைய பத்து வயதில் கணினி மீது ஒரு காதல் ஏற்பட அதன் விளைவால் தன்னுடைய எல்லாமும் ஆன நூல்களின் உதவியுடன் நிரலாக்க மொழிகளை(Programming Languages) கற்று கொண்டார்.இந்த சமயத்தில் எலன் உடைய பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டனர் .இதன் பின் அவர் தந்தை உடனேயே எலன் மற்றும் அவர் உடன் பிறந்தவர்கள் இருக்க தொடர்ந்தனர்.

முதல் வெற்றி

                  பெரிய கனவுகளையும் மிக பெஅந்த நாட்டில்ரி கட்டாய ராணுவத்தில்ய  நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களை கொண்ட இவர் தன் 12-ம் வயதில்  “பிளாஸ்டர்” என்ற விளையாட்டு மென்பொருள் ஒன்றை உருவாக்கி அதை சுமார் 500 டாலர்களுக்கு விற்று தன் முதல் ஆதாயத்தை ஈட்டினார்.தொடர்ந்து நூல்கள் படிப்பதை அதிகம் செய்தவர் தென்னாப்பிரிக்காவில் படிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதை உணர்ந்தார்.மேலும் அந்த நாட்டில் கட்டாய ராணுவத்தில் பணியாற்ற வேண்டிய நிலை இருந்ததால் கனடா உள்ள  தன் தாயிடம்  செல்ல தீர்மானித்தார்.

கல்லூரி படிப்பு

                     கனடா சென்ற அவர் 1989-ல் தன் பதினேழாம் வயதில் குயின் பல்கலைக்கழகத்தில்(Queens University) சேர்ந்தார்.எலன் தன்னுடைய பார்வையை அகலமாக்கி கொண்டார்.பின் 1992-ம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வானியா பல்கலைக்கழகத்தில்(Pennsillvania University) பொருளாதாரம்  மற்றும் இயற்பியல் படிக்க அமெரிக்கா சென்றார் .அவர் பொருளாதாரத்தில் மற்றும் இயற்பியலில் இளங்கலை பெற்றார்.  இதன் பின் காலிஃபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) முனைவருக்கான ஆராய்ச்சி படிப்பை படிக்கச் சென்று இரண்டே நாட்களில் பல்கலைக்கழகம் விட்டு நின்றார்.இதன் காரணம் தான் நிறுவனம் துவங்க முடிவெடுத்ததே.

முதல் நிறுவனம்

                    எலன் “சிப் 2” என்ற நிறுவனத்தை துவங்கினார்.சிப் 2 நிறுவனம் பல்வேறு வலைத்தளங்களுக்கான உள்ளடக்கம் தரும் பணியை நோக்கமாக கொண்டது. பின்,1999-ம் ஆண்டு  காம்பெக் கணினி நிறுவனம் சிப் 2 நிறுவனத்தை 30.7 கோடி டாலர்களுக்கு வாங்கியது. அதில் வந்த பணத்தை கொண்டு X.com  என்ற வருவாய் மற்றும் பண வழங்கிடு தொடர்பான சேவைகளை அளிக்கும் தளத்தை துவங்கினார்.பின் சிறிது காலம் கழித்து இந்த நிறுவனம் பேபால் என்று பெயர் மாற்றம் கொண்டது .2002-ம் ஆண்டு இ-பே  (E-Bay)  நிறுவனம்  பேபால்-லை 1.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம்(SpaceX)

                இதன் பின்னான காலத்தில் எலன் மலேரியா காய்ச்சலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்.அதில் இருந்து மீண்டு 2002-ம் ஆண்டு  ஸ்பேஸ்-எக்ஸ் என்ற விண்வெளி சார்ந்த நிறுவனத்தை அமைத்தார்.இந்த நிறுவனம் விண்வெளி தொடர்பாண ஆய்வுகளையும் விண்கலன்களையும் தயாரிக்க துவங்கியது.இதே சமயத்தில் 2003-இல் மின்சார மகிழுந்துகளை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தை(Tesla Corporation) துவங்கினார். எலன் எப்போதுமே ஆய்வுகளிலேயே தன் நேரத்தை கழித்தார்.மேலும் இவர் ஐயன் மேன்(Iron Man)  படத்தில் வரும் டோனி ஸ்டார்க் போல உண்மை உலக நாயகனாக அழைக்கப்பட்டார்.ஐயன் மேன் படத்தில் பல்வேறு நிகழ்வுகளை இவருடைய நிறுவங்களில் படமெடுக்க ப்பட்டது ஆகும் .

          Source:SpaceX

தோல்விகளால் தகராதவர்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தான் செலுத்திய முதல் இரு விண்கலன்களும் வானிலே வெடித்து சிதறியது.இதனால் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு எலன் உள்ளானார்.2008-ம் ஆண்டு பூமிக்கு வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை எடுத்து செல்லும் பணியை நாசா ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்திடம் தந்தது.மேலும் வழக்கத்தை விட குறைந்த செலவில் விண்கலங்களை செலுத்தும் ஆய்வுகளில் ஈடுபட துவங்கியது.2003-ம் ஆண்டு துவங்கப்பட்ட டெஸ்லா நிறுவனம் 2008-ல் தன் முதல் மின்சார மகிழுந்தான “ரோட்ஸ்டெரை ” அறிமுகம் செய்தது.இது வெறும் 3.7 நொடிகளில் 60 மைல் வேகத்தை தொடும் சிறப்பு கொண்டது மட்டுமில்லாமல் முழுக்க மின்சாரத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.

 

tesla car க்கான பட முடிவு Source:Tesla

இதன் பின் எஸ் ,எஸ் செடான் போன்று மின்சாரத்தில் இயங்கும் அதிவேக ஆற்றல் கொண்ட மகிழுந்துகளை விற்பனை செய்ய துவங்கியது.2017-ம் ஆண்டு உலகின் பெரிய மகிழுந்து தயாரிப்பு நிறுவங்களுள் ஒன்றான ஜெனரல் மோட்டார்சை விட மதிப்புள்ள நிறுவனம் என்று செய்திகள் கூறுகின்றன.

நியூராலின்க் நிறுவனம்

                      2017-ம் ஆண்டு  செயற்கை நுண்ணறிவு பற்றி ஆய்வு செய்ய  நியூராலின்க்  நிறுவனத்தை தோற்றுவித்தார்.மேலும் எதிர்காலத்தின்  அதிவேக போக்குவரத்துக்காக பூமிக்கு அடியில் இயங்க கூடிய பாட் சேவைகளை தரும்   ஹைப்பர்லூப்  நிறுவனத்தை தோற்றுவித்தார்.

எலன் தற்போது 20 பில்லியன் டாலர்களோடு உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் பல மாணவர்களுக்கு கனவு நாயகனாகவும் உள்ளார்.இவர் 2022-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கோளுக்கு விண்வெளிக்கலன்களும் அதன் பின் மனிதர்களையும் அனுப்ப ஆய்வுகளில் உள்ளார்.

விரைவில் செல்வோம் செவ்வாய்க்கு

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *