குறியாக்க நாணயம்(Cryptocurrency)-பகுதி 1

குறியாக்க நாணயம்(Cryptocurrency)

குறியாக்க நாணயம்(Cryptocurrency) இணையத்தில் சில காலமாக தொடர்ந்து ஒலிக்கும் சொல்.சில காலம் நம் உலக பொருளாதாரத்தை ஒரு தொழிநுட்பத்தை கொண்டு முற்றிலுமாக மாற்ற முடியும் என்றால் யாரும் அதை ஏற்று கொண்டிருக்கமாட்டார்கள்.உலகில் உள்ள அனைத்து நாட்டு நாணயங்களயும் விடுத்து உலகம் முழுதும் ஒரே பயன்படுத்த முடியும் என்று யாராவது சில வருடங்கள் முன் கூறி இருந்தால் கண்டிப்பாக சிரித்திருப்பார்கள்.ஆனால் இன்று அப்படி கூறினால் முடியும் என்றே பதில் வரும்.இந்த மாற்றத்திற்கு காரணம் குறியாக்க நாணயம்(Cryptocurrency).இது இணையத்தின் உதவியை கொண்டு இந்த இணைய உலகிற்காக கிடைக்க பெற்ற ஒரு கண்டுபிடிப்பு.குறியாக்க நாணயத்தை நன்கு புரிந்துகொள்ள கொள்ள இதை சார்ந்த சில அடிப்படை கருத்தமைவுகளை(Concept) புரிந்து கொள்வோம்.

“பிட்காயின் (குறியாக்க நாணயம்) தொழிநுட்ப உலகில் திறமையை உணர்த்தும் ஒரு பெரும் சாதனை”.

-பில் கேட்ஸ்

Image result for cryptocurrency

படத்தில் குறியாக்க நாணயத்தின் வகைகளான

Bitcoin,Ethereum,Ripple,Litecoin,Namecoin


பணம் என்றால் என்ன?

இது நமக்கு நன்கு பரிட்சயமான கருத்தமைவு என்றாலும் இதில் இருந்து துவங்குவதே சரியாக இருக்கும்.

பணம் என்பது மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள்,சேவைகள் முதலியவற்றைப் எளிதாக பரிமாறிக்கொள்ள அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு(Centralized Currency).

ஆயிரம் வருடங்கள் முன் பணம் என்பது தங்கத்தின் வடிவில் இருந்தது.நமக்கு வேண்டிய பொருட்களை பொருட்களுக்கு ஈடான தங்கத்தை கொடுத்து பரிமாறி கொள்வோம்.அதுவே ஆயிரம் வருடங்கள் கழித்து அதாவது நிகழ்காலத்தில் அவை அனைத்தும் காகித வடிவில் அரசால் அச்சடிக்கப்பட்டு நம்மிடம் வருகிறது(Fiat Currency).இதே காகித பணத்தை வங்கியின் உதவியோடு இன்று டெபிட் கார்டுகளின் வழியே பயன்படுத்திகிறோம்.

மையப்படுத்தப்பட்ட நாணயத்திற்கும் மையப்படுத்தப்படாத நாணயத்திற்கு இடையில் உள்ள வேறுபாடுகள்(Difference between Centralized சுர்ரெனசி and De-Centralized Currency):

மேல் சொன்னது போல் நாம் பயன்படுத்தும் பணமானது(நாணயம்) அரசால் அச்சடிக்கப்பட்டு மக்களிடம் செல்கிறது.அரசு விரும்பியவாறு இதை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.எடுத்துக்காட்டாக கடந்த வருடம் நடந்த பண மதிப்பீட்டு நீக்கம் ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் தாள்களை வெறும் தாள்களாக மாற்றி விட்டது.அரசிடம் பணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்ததினாலேயே இது முடிந்தது.உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தத்தம் நாட்டின் நாணயத்தின் மேல் அதிகாரம் கொள்ளவே விரும்பும்.இதுவே மையப்படுத்தப்பட்ட நாணயம்.ஆங்கிலத்தில் Centralized Currency என அழைக்கப்பெறுகிறது.இந்த நாணயங்கள் அரசால் தரப்பட்டது என்றாலும் இதை பலரும் போலியாக(Counterfeit Note) தயாரித்து வெளியிடுவது இதன் பெரும் பின்னைடாவாக இன்று வரை உள்ளது.

அதற்கு நேர் எதிராக இருப்பது மையப்படுத்தப்படாத நாணயம்(De-Centralized Currency).எந்த அரசின் தலையிடும் இல்லாமல் எந்த வங்கியின் தலையிடும் இல்லாமல் உலகம் முழுதும் பயன்படுத்த தக்க நாணயம் மையப்படுத்தப்படாத நாணயம்(Read as Cryptocurrency).முன் அரசிடம் இருந்த அதிகாரம் இன்று அந்த நாணயத்தை பயன்படுத்துபவரிடம் செல்கிறது.அதாவது அதிகார மையம் ஒரு இடத்தில் இல்லாமல் பரவலாக்கப்படுகிறது.

மேலும் மையப்படுத்தப்படாத நாணயமான குறியாக்க நாணயம்(Cryptocurrency) ஒரு நபரிடம் இருந்து வேறொரு நபரிடம் பரிமாறப்படுவதாக உள்ளது(Peer to Peer).நடுவில் அதிகார மையம் இல்லாததால் சுதந்திரமாக இது செயல்படுகிறது.

Image result for centralized vs decentralized currency

படம்:Medium


குறியாக்க நாணயங்கள்

Bitcoin,Litecoin,Ethereum,Ripple போன்றவை குறியாக்க நாணயத்தின் வகைகளே.எளிதான வார்த்தைகளில் பறவைகள் என்பது ஒரு பொது பெயர் ஆகும்.புறா,காகம்,பருந்து,மைனா என அனைத்தும் பறவைகள் என்னும் ஒரு பொது பெயரின் கீழ் வருவதை போல் Bitcoin,Litecoin,Ethereum,Ripple என அனைத்தும் குறியாக்க நாணயம் என்னும் பொது பெயரின் கீழ் வருகிறது.

மேலும் பகுதி-2இல் தொடரும்…

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *