தமிழ் வணக்கம்!

எல்லா புகழும் தமிழ் மொழிக்கே!. சரி,இந்த தளம் எதை பற்றி என்று முன்கூட்டியே கூறிவிடுகிறோம் . செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ),குறியாக்கப்பட்ட நாணயம்(Cryptocurrency ),மெய்நிகர் நனவு (Virtual Reality ), விண்வெளி  ஆய்வுப்பயணம் (Space Exploration) என்று பல சொற்கள் இன்று நவீன உலகை ஆட்டுவிக்கும் சக்தியை கொண்டுள்ளன.இவை அனைத்துமே சேரும் புள்ளி அறிவியல்.இதை நவீன அறிவியல் என்று கூறினால் கூட மிகையாகாது.இந்த நவீன அறிவியலை நம் தமிழ் மொழியில் எங்களால்  இயன்ற வரை விளக்க  நாங்கள் எடுத்த முயற்சியே இந்த வலைப்பக்கம்.

சரி,தமிழ் வலைப்பக்கம் என்று கூறினோம் ஆனால்  இடையில் ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் கேட்டால் அந்த கேள்வி சரியே.உலகில் அறிவியல் படைப்புகள்,பாதிப்புகள் அனைத்துமே ஆங்கிலத்தில் இருப்பதால் அவற்றை தமிழில் விளக்க முற்படும்போது ஏற்படும் சில இடர்பாடுகளை களையவே நடுவில் வரும்  இந்த ஆங்கில சொற்கள்.அறிவியல் தமிழை செம்மை படுத்தவேண்டியது நம்ம கடமை ஆகும்.அதை எங்களால் முடிந்த அளவிற்கு இந்த தளத்தின் மூலம் முயற்சிப்போம்.மேலும் உங்களின் கருத்துக்களின் துணை இன்றி இதை செயல்படுத்த கடுமை என்று உணர்கிறோம்.அதனால் உங்கள் கருத்துக்களை thescienceway@yahoo.com மின்னஞ்சல் மூலம் கூற வேண்டுகிறோம்.

 

 

One thought on “தமிழ் வணக்கம்!

  • December 13, 2017 at 9:21 pm
    Permalink

    அருமையான தொடக்கம் !!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *