திரைப்படம் தரும் உளவியல் மாற்றங்கள்

               திரைப்படம்  வாழ்வை இனிமையாக்குகின்றன .மனிதனின் வாழ்க்கைக்கும் திரைப்படத்திற்கும் நெருக்கம் அதிகம் ஆகிக்கொண்டே செல்கின்றன.ஆனால் இதே திரைப்படம் வேறு சிறு தாக்கங்களையும் ஏற்பதுத்துகின்ற ன. காலிஃபோர்னியாவில் பெல்லா ஹெர்ந்தோன் மற்றும் பிரிசில்லா சுய் என்னும் இரு பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இதற்கு பின்னணியில் புகழ் பெற்ற ஆங்கில தொலைக்காட்சி திரைப்பட தொடரான “13 Reasons Why” ,உளவியல் ரீதியாக அவர்களுக்கு அந்த எண்ணத்தை விதைத்துள்ளது. – ஃபாக்ஸ் செய்திகள்.

Head, Think, Slide Strips, Film, Filmstrip, Projector

    படம்:Pixabay

                இது போன்று திரைப்படங்கள் மக்களிடம் தரும் உளவியல் மாற்றங்களை அமெரிக்காவில் நடக்கும் ஒரு நிகழ்வென்று புறந்தள்ள இயலாது.இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்கா,ஐரோப்பா முதல் தெற்காசிய நாடுகள் முதல் உலகம் முழுதும் நிகழ்கிறது.

 திரைப்படம் மற்றும் அதன் தாக்கம் 

நீங்கள் குறிப்பிட்ட வகை திரைப்படங்களை தீவிரமாக பின்பற்றுபவர் எனில் ,கண்டிப்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் அதன் தாக்கம் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக நீங்கள் மணிரத்தினம் இயக்கிய படங்களின் தீவிர பின்பற்றாளர் எனில்,உங்கள்  காதலிலோ அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளிலோ அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும்.பழி தூற்றுகிற சூழலில் வளரும் குழந்தைகளோ அல்லது இளம் வயதினரோ ,வன்முறை காட்சிகள் அதிகம் கொண்ட திரைப்படங்களை காணும் பொழுது அதே போல் அவர்களின் உண்மை வாழ்விலும் வன்முறையோடு மற்ற மக்களிடம் நடந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன.நாம் ஏன் எடுத்துக்காட்டுகள் கொண்டு மட்டுமே யோசிக்க வேண்டும், உண்மை வாழ்வில் உள்ள இதன் தாக்கத்தை பார்ப்போமே.ஆறு வயது குழந்தை திரையில் தோன்றும் நடிகை போல உடை அணிய பழகுவதும்,திரையில் தோன்றும் நடிகர் பேசும் வசனங்களின் பொருள் புரியாவிட்டாலும் குழந்தைகள் அந்த வசனங்களை பேசிட உளவியல் ரீதியாக தூண்டப்படுகின்றனர்.

violent movies க்கான பட முடிவு

படம்:Bruceallen

எதிர்மறையாக மட்டும் இல்லாமல் பல நிகழ்வுகள் நன்முறையில் கூட மாற்றங்களை திரைப்படம் விதைக்கின்றது .அறிவியல் சார்ந்த படங்களையோ திறன்களை வளர்ப்பது போன்ற படங்களை காணும்பொழுது அதே உளவியல் மாற்றங்களை தரும் ஆற்றல் திரைப்படங்களுக்கு உள்ளது.

தெரிந்தோ தெரியாமலேயோ திரைப்படம் நம் வாழ்வில் ஒன்றாகி விட்டது.நல்ல கருத்துக்களை விதைக்கும் படங்களை மட்டும் ஆதரிப்பதன் மூலம் திரைப்படம் ஒரு சிறந்த கேளிக்கையாகவும் வாழ்க்கைக்கு உதவும் அறிவு பெட்டகமாகவும் இருக்கும்.

எல்லைகள் என்றும் ஆற்றல் கொண்டவை.எல்லைகளை மீறும்பொழுது தான் அனைத்து சிக்கல்களும்.

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *