செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) – ஒரு சிறிய அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence):


 

“மனிதர்கள் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தலை கண்டு அச்சம் கொள்ளும் தருணம்  மிக அருகில் உள்ளது – பில் கேட்ஸ் “

 

நான் சொல்கிறேன்,யார் ஒருவர் செயற்கை நுண்ணறிவு துறையில் கைதேர்ந்தவர் ஆகிறாரோ,யார் ஒருவர் அதன் மரபுகளை(Derivative) நன்கு அறிந்து,நாம் நினைக்க  இயலாதவாறு செயல்படுத்துகிறாரோ  அவர்  இந்த உலகின் முதல்  ட்ரில்லியனர் ஆவார்  -மார்க் கியூபன் 

 

Hand, Robot, Human, Divine, Spark, Contact, Machine

படம்: PIXABAY Under Creative Commons

      இந்த இருவர் மட்டும் அல்ல உலகின் பல ஆராச்சியாளர்கள்,செல்வந்தர்களுக்கு  பிடித்த மற்றும் அதிகம் பேசும் ஒரு வார்த்தை செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence).  சரி,ஆங்கிலத்தில் Artificial Intelligence  என அழைக்க படும் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

நான் wikipedia-விடம் சென்று இதை எளிதில் புரிந்து கொள்ள உதவி கேட்டதற்கு அது

இவ்வாறு கூறியது, Quoting from Wikipedia “Artificial intelligence (AI, also machine intelligenceMI) is Intelligence displayed machines, in contrast with the natural intelligence (NI) displayed by humans and other animals. In Computer Science, AI research is defined as the study of “Intelligent Agents”.இதை எளிமையான  கீழே  கூற முனை

                           செயற்கை நுண்ணறிவானது  ஒரு கணினியை மனிதனின் மூளையை போல் யோசிக்க தூண்டும்  அறிவியல் (கணினி அறிவியல்) ஆகும்.இன்னும் எளிதாக கூற வேண்டுமானால் ‘ஒரு ஐந்து வயது குழந்தைக்கு எப்படி கற்பிப்போமோ அதுபோல ஒரு கணினிக்கு கற்பித்து மனிதனை போல் சிந்திக்கும் ஆற்றலை தூண்டுவது.குழந்தையிடம் படங்கள்,எண்கள்,வார்த்தைகள் போன்றவற்றை முதலில் கற்பிப்போம் .பின் குழந்தை அவற்றை கற்ற பின்  அவற்றில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா? படத்தில் இருப்பது எத்தனை பேர்? என்று கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை சிந்திக்க செய்வோமோ அதே போல் கணினி மென்பொருளுக்கு நிரலாக்கத்தின்(Programming) உதவியுடன் கற்பித்து மனிதன் செய்யும் செயல்களையும் மனிதனால் செய்ய முடியாத கடினமான செயல்களையும் கணினிகளை செய்ய வைப்பதே இந்த துரையின் பெரும் நோக்கம். எடுத்துக்காட்டு கூற வேண்டுமானால் நாம் அனைவரும் கண்ட “எந்திரன்” படத்தில் வரும் சிட்டி ரோபோவானது செயற்கை நுண்ணறிவிற்கு எளிய உதாரணம் ஆகும்.அதில் சிட்டி முதலில் மனிதனை போல் யோசிக்கும் திறன் இல்லாமல் ஒரு இயந்திரம் போலவே காட்சி தரும்.ஒரு கட்டத்திற்கு பின் ஆராச்சியாளரான வசிகரன் சிட்டி ரோபோவிற்கு உணர்ச்சிகள் பற்றியும் மனித யோசிக்கும் திறன் பற்றியும் கற்பிப்பார்.இது செயற்கை நுண்ணறிவை புரிந்து கொள்ள  ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

Image result for endhiran robot photos

 

                                                          படம் : Endhiran Movie

 துணை துறைகள்:    

    சரி,கட்டுரைக்கு வருவோம்.மேற்குறியதை போல் வாய் வழி அல்லாமல் கணினிகளுக்கு Natural Language Processing,Deep Learning ,Machine Learning போன்ற பல்வேறு துணை துறைகளின் வழியே கற்பிக்க படுகின்றது.செயற்கை நுண்ணறிவு அதிவேகமாக வளர்ந்து வரும் துறை ஆகினும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பலவற்றில் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே நுழைந்து விட்டது .எடுத்துக்காட்டாக Amazon நிறுவனம் தங்களின் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பரிந்துரைப்பதில் செயற்கை நுண்ணறிவை என்றோ பயன்படுத்த துவங்கிவிட்டது.இன்னும் கூற போனால் Facebook நிறுவனமும், APPLE நிறுவனத்தின் SIRI   மென்பொருளும் என்று இருந்தோ செயற்கை நுண்ணறிவை உபயோகித்து  கொண்டுதான் வருகின்றன.

       Artificial Intelligence பற்றிய ஆய்வில் முன்னணியில் இருக்கும் சில நிறுவங்கள் Amazon,Google Deepmind ,Microsoft,Baidu,Neura Link,Apple மேலும் சில.

 

செயற்கை நுண்ணறிவை பற்றிய ஒரு முன்னுரையே இது .மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள அடுத்து வரும் தொடர் பதிவுகளை பார்க்கவும்.

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *