இது சிலிக்கான் பள்ளத்தாக்கின்(Silicon Valley) கதை

சிலிக்கான் பள்ளத்தாக்கு(Silicon Valley):

 

                                                   சிலிக்கான் பள்ளத்தாக்கை பற்றி சொல்லும் முன் நீங்கள் சொல்லுங்கள்    இன்று கூகுளில் எதையாவது தேடினீர்களா? இல்லை முகநூலில் நண்பர்கள் பதிவேற்றம் செய்த புகைப்படத்தை பார்த்தீர்களா? நீங்கள் ஆப்பிள் கைபேசியின் ஆர்வலரா? அல்லது பணிக்கு ஊபர்  டாக்ஸியில் செல்பவரா? சரி,சரி  கோபம் கொள்ளாதீர்கள்.மேல் சொன்ன நிறுவங்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால்  சிலிக்கான்  பள்ளத்தாக்கிற்கும் மேல் சொன்ன நிறுவங்களுக்கும் நெருங்கிய நட்புண்டு.

 

     படம்: Unsplash

சிலிக்கான் தந்த பெயர்:

சிலிக்கான் பள்ளத்தாக்கு பற்றி இரண்டு விதமாக கூறலாம்.

ஒன்று – ஊரில் வழிப்போக்கனை பிடித்து கேட்டால் சிலிக்கான் பள்ளத்தாக்கா? அப்படி என்றால்? அவர்களிடம் பதிலை இப்படி கூறலாம்.அதாங்க நம்ம ஊருல அமெரிக்கா மாப்பிளைனு சொல்வாங்களே.அவங்க பெரும்பாலும் அமெரிக்காவுல இங்க தான் வசிக்குறாங்க.இப்போ புரியுதா சிலிக்கான் பள்ளத்தாக்கு பற்றி.

இரண்டு – சிலிக்கான் பள்ளத்தாக்கு பற்றி  விவரிப்பு.அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைத்துள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு தெற்கு பகுதியில் உள்ளது தான் இந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு.இந்த சிலிக்கான் பள்ளத்தாக்கு ஒரு நகரே அல்ல மாகாணமோ அல்ல இது பல நகர்களை தொகுதியாக கொண்ட ஒரு பகுதி.

இருபதாம் நூற்றாண்டின் நடுவில் வந்த தொழில் புரட்சியின் விளைவாக அமெரிக்காவின் பல பகுதிகளில் பெரும் தொழில் நிறுவங்கள் முளைத்தன.அமெரிக்காவின் மேற்கு கரையோர பகுதிகளான   சாண்டா கிளாரா ,சான் மேடியோ,அலமேடாவில் அதிகப்படியான கணினி சார்ந்த நிறுவங்களும் மின்னணுவியல் தொழிற்சாலைகளும் தோன்றின.இவை அனைத்திற்கும் மூல பொருளான சிலிகானின் பெயரே இந்த பகுதியை குறிப்பிட ஒரு பெயராக மாறியது.

             இன்று உலகில் இணையமும் கணினியும் பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு இந்த சிலிக்கான் பள்ளத்தாக்கும் ஒரு முக்கிய காரணி.

                                                                   

   படம்: Wikimedia Commons

நிறுவனங்கள் (Fortune Companies) :

சிலிக்கான் பள்ளத்தாக்கு உலகின் மிக முக்கிய மற்றும் பெரும் நிறுவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.பெயருக்கு ஏற்றார் போல் சிலிக்கான் சில்களை(Chip) தயாரிக்கும்  இன்டெல்(Intel),என்விடியா(NVIDIA) போன்ற நிறுவங்ககளும் அல்பாபெட்(Alphabet) போன்ற நிறுவங்களும் இங்குள்ளன.மேலும் இங்குள்ள முக்கியமான நிறுவங்களின் பெயர்கள் சில இங்கே

  • ஆப்பிள் (Apple Inc)
  •  எச்-பி (HP Enterprise)
  • டிஸ்னி (Disney)
  • இன்டெல் (Intel)
  •  ஓராக்ல் (Oracle)
  • வெல்ஸ் பார்கோ (Wells Fargo)
  • முகநூல் (Facebook )
  • விசா (VISA)
  • டெஸ்லா (Tesla)

பல்கலைக்கழகங்கள்:

இங்கு பெரும் நிறுவனங்கள் மட்டும் அல்லாது உலகின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ளன.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்,சான் ஜோஸ் பல்கலைக்கழகம்,சாண்டா கிளாரா பல்கலைகலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.கூகிள் நிறுவனர்களான செர்கே பிரின் மற்றும் லார்ரி பேஜ் ,கூகிள் செயல்தலைவர் ஆன சுந்தர் பிச்சை ஆகியோர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களாகும்.மேலும் இந்த பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்கே முக்கியத்துவம் தருவதால் நோபல் பரிசு பெற்றவர்களும் உலகம் முழுதும் இருந்து வரும் ஆராய்ச்சி மாணவர்களும் நிறைந்து உள்ளனர்.பெரும் நிறுவனங்கள் சூழ்ந்து இருப்பதால் ஆராய்ச்சி கூடங்களும் கண்டுபிடுப்புகளும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் என்றுமே உள்ளன.தற்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளான செயற்கை நுண்ணறிவு,நானோ டெக்னாலஜி போன்றவை பற்றி எப்போதுமே இங்கு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதி :

சான் பிரான்சிஸ்கோ பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.அமெரிக்காவின் அதி முக்கிய இடமாகவும் தொழில்புரட்சி இனையபுரட்சி அறிவியல்புரட்சியின் தாயகமாக இது விளங்குவதால் இளைஞர்களின் கனவுலகமாக இது உள்ளது.

இப்போது புரிகிறதா அமெரிக்கா விசா வாங்குவதற்கு சென்னை அமெரிக்கா தூதரகம் முன் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் ஏன் நிற்கிறார்கள் என்று.

 

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *