இணையம் எப்படி இயங்குகிறது?

20-ம்  நூற்றாண்டின் முடிவின் வரையில் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகளாக உணவு,உடை,இருப்பிடமாக இருந்தது.21-ம் நூற்றாண்டில் இந்த பட்டியலில் சேர்ந்தது இணையம்.இணையம் இங்குள்ள பலரின் வாழ்வில் எத்தகைய இடம் பிடித்துள்ளது என்றால் நடக்கும்போதும்,ரயிலில் பயணிக்கும்போதும்,நண்பர்களிடம் பேசும்போதும் இணையத்துடனேயே இணைந்து  உள்ளனர்.திருமணங்களிலோ,திருவிழாக்களிலோ கூட புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் பலருக்கு தூக்கம் வராது.இப்போது இணையம் பெற்றுள்ள நீங்காத இடத்தை பற்றி கதைப்பதை காட்டிலும் அந்த இணையம் எப்படி உருவானது எப்படி இயங்குகிறது என்பதை பற்றி கதைப்பது சாலச்சிறந்தது.

இணையம் 

இணையம்(Internet) என்பது உலகளவில் உள்ள பல கணினிகளின் வலையமைப்புகளை கொண்ட பெரும் வலையமைவு ஆகும்.International Network என்பதன் சுருக்கமே Internet ஆகும்.உலகில் உள்ள கோடிக்கணக்கான கணினிகளும்,கைபேசிகளும்,வழங்கர்களும்(server) தொடர்பு சங்கிலியாக செயல்பட்டதின் விளைவே இன்று நம் முன் இணையம் என்னும் சக்தியாக நிற்கிறது.இன்று பெரும் சக்தியாக இணையம் நம் கண் முன் விளங்கினாலும் இதன் துவக்கம் என்னமோ அதிகம் பேசப்படாததாய் தான் இருந்தது.இணையத்தின் கதை ரஷ்யாவில் இருந்து துவங்குகிறது.1957-ம் ஆண்டு காலத்தில் ரஷ்யா ஸ்புட்னிக் மற்றும் ஆளில்லா விண்கலங்களை விண்ணிற்கு செலுத்தியது.இரண்டாம் உலக போரின் முடிந்த பின்னர் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு இடையே கடும்போட்டி நிலவியதை அனைவரும் அறிவோம்.இந்த போட்டியின் காரணமாக இரண்டு நாட்டிற்கும் இடையில் பனிப்போர் நிலவியது.தொழிநுட்பம்,மருத்துவம்,பொருளாதாரம் என அனைத்திலுமே முந்தவேண்டும் என அமெரிக்கா நினைத்தது.மறுபடியும் 1957-லிற்கு வருவோம்.ஸ்புட்னிக் வெற்றியின் பின் அமெரிக்கா ரஷ்யாவின் சாதனைகளை தகர்க்க தானும் விண்கலன்களையும் அனுப்பியும் புது தொழிநுட்பங்களை உருவாக்குவதிலும் தன் கவனத்தை செலுத்தியது.

அமெரிக்காவின் பாதுகாப்பு துறையில் தகவல் தொடர்புக்காக ஒரு பிணையத்தை(Network) உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும் பல நிறுவனங்களும் இதில் இணைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள துவங்கின.தாம் உருவாக்கப்போகும் பிணையம் போர் மூண்டால் கூட அதனால் பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென அமெரிக்கா எண்ணியது.இதே போன்ற ஆய்வுகளை ஐரோப்பாவிலும் நடந்தது.1969-ம் ஆண்டு ARPA என்னும் அரசின் நிறுவனம் நான்கு மாநிலங்களின் கணினிகளை இணைத்து முதல் பிணையத்தை உருவாக்கியது.இதன் பின் உலகம் முழுக்க இந்த பிணையம் வளர்ச்சியடைந்தது.

ஒரு காட்டின் கதை 

இணையத்தை பற்றி இன்னும் எளிமையான வார்த்தைகளில் ஒரு கதை கொண்டு அறிவோம்.

ஒரு பெரிய காடொன்று இருந்தது.அந்த காட்டில் ஆயிரக்கணக்கான மரங்கள் வாழ்ந்தன.ஒவ்வொரு மரமும் இன்னோரு மரத்துடன் அடிக்கடி பேசிக்கொள்ளும்.இதனால் காட்டின் ஆரம்பத்தில் உள்ள ஒரு மரம் சொன்ன விடயம் காட்டின் இறுதியில் இருக்கும் மரத்திடம் சென்று எளிமையாக சேரும்.இதனாலேயே காட்டில் அனைத்து தகவல்களும் அனைத்து மரத்திடமும் சங்கிலி தொடர்போல சென்று சேரும்.இதே காட்டின் ஒரு பகுதியில் ஐந்து மரங்கள் இருந்தன.அவை மற்ற மரங்களிடம் பேசாமல் இருப்பதால் அவற்றிடம் எந்த தகவலும் சென்று சேராமல் இருந்தது.கதையை உங்களுக்கு பிடித்தவாறு நிறைவு செய்து கொள்ளலாம்…

மேலே சொன்ன கதையை இணையத்துடன் ஒப்பிடுவோம்.ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கணினியென நினைத்துக்கொள்வோம்.மரங்கள் அனைத்தும் சங்கிலி தொடர்போல ஒரு பிணையமாக செயல்படுவதுபோல் உலகத்தில் பல மூலையில் உள்ள கணினிகள் ஒரு பிணையமாக செயல்படுகிறது.இதன் மூலம் தகவல்கள்(செய்திகள்,முகநூல் பதிவுகள்,காணொளிகள்,ஏன் இந்த வலைப்பூ கூட) அனைத்தும் உலகின் அனைத்து மூலைகளிலும் சென்றடையும்.

இதை மேலும் விளக்க சில பழமொழிகள்

தனி மரம்(Single Computer) தோப்பாகாது(Can’t be  Internet).

சிறுதுளி(Many Computers) பெருவெள்ளம்(Is Internet).

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும் மற்றும் பின்னூட்டம் இடவும்.

மேலும் படிக்கவும: இணைய கம்பிவடங்கள்(Internet Cables)

 

 

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar