கடலுக்கு அடியில் இணைய கம்பிவடங்கள்(Internet Cables)

கம்பிவடங்கள்(Cables) ஒரு இடத்தில இருந்து இன்னோரு இடத்திற்கு மின்சாரத்தை கடத்தவோ அல்லது ஒரு சாதனத்தில் இருந்து வேறொரு சாதனத்திற்கு தரவுகளை கடத்தவோ(Data Transmission) பயன்படுகிறது.அனால்,இந்த கம்பிவடங்கள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்திற்கு முதுகெலும்பாக உள்ளது என்று நாம் அதிகம் கவனிக்காத ஒரு செய்தியே.கம்பிவடங்கள் என்பது ஒன்றிற்கும் மேற்பட்ட கம்பிகளால்(Wires) ஆன தொகுதி ஆகும்.இங்கு பெரும்பாலானோர் பூமிக்கு மேல் இருக்கும் செயற்கைகோளின் உதவியால் தான் இந்த இணையம் இயங்குகிறது என்று நினைத்து கொண்டு இருக்கிறோம்.அனால்,உண்மை வேறு.கம்பிவடங்கள் இதில் பெரும் பங்கை ஆற்றுகின்றன.இதை பற்றிய மென்மையான விளக்கம் கீழே

 

படம்:Theatlantic

இணையம் என்றால் என்ன

இணையம் அல்லது உலகளாவிய வலைத்தளம்(World Wide Web) என்பது பல கணினிகளின் வலைப்பின்னல்(Network) ஆகும்.எளிமையான வார்த்தைகளில் நாம் அனைவரும் சிலந்தி வலைகளை கண்டிருப்போம்.அதில் ஒவ்வொரு இலையும்  இன்னோரு இலையுடன் இணைந்து ஒரு வலைப்பின்னலை உருவாக்கும்.இப்போது இந்த சிலந்தி வலையை நாம் இந்த உலகமாக கற்பனை செய்துகொள்வோம்.அதில் உள்ள இலைகளாக கணினிகள் உள்ளன.இப்பொது இந்த உலகம் முழுதும் உள்ள கணினிகள் இணைந்து ஒரு மாபெரும் வலைப்பின்னலை உருவாக்குகிறது.அதன் பெயர் இணையம் ஆகும்.

இணையம் என்பது குடை போன்றது(Umbrella Term).கோடிக்கணக்கான கணினிகள் இணைக்கப்பட்டதால் இன்று சிலந்தி வலைப்போல் இணையம் இயங்குகிறது.கனடாவில் உள்ள நண்பனிடம் ஈழத்தில் இருபவரால் இந்த இணையத்தில் மூலம் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு இந்த அமைப்பே காரணம்.

இணையம் மற்றும் கம்பிவடங்கள்(Internet Cables)

இப்பொழுது கம்பிவடங்கள் படத்தினுள் நுழைகிறது.எடுத்துக்காட்டாக ஈழத்தில் சுமார் ஒரு லட்சம் கணினிகள் உள்ளது என வைத்து கொள்வோம்.அவை அனைத்தும் கம்பிவடங்களால் இணைக்கப்படுகிறது.இதனால் அனைத்து கணினிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையாக இருக்கின்றன.அருகில் உள்ள தமிழ்நாட்டை ஈழம் கடலால் பிரிக்க பட்டுஉள்ளது.ஈழத்தில் உள்ள கணினிகளால் தமிழ்நாட்டில் உள்ள கணினிகளோடு எப்படி தொடர்பு கொள்ள முடிகிறது என்று யோசித்ததுண்டா? இதற்கும் பதில் கம்பிவடங்கள் தான்.அனால் இங்கு நிலத்தில் அல்லாமல் கடலுக்கு அடியில் இருக்கும்.இதனால் தான் எல்லைகளை தாண்டி இணையம் செயல்படுகிறது.மேலும் செயற்கோள்களின் வழியேவும் இது செயல்படுகிறது.இணையம் குடை போன்றது(Umbrella term)

கடலுக்கு அடியில் இருக்கும் இணைய கம்பிவடங்கள்

ஒரு நாட்டின் கரையில் இருந்து மற்றொரு நாட்டின்(அல்லது கண்டத்தின்) கரை வரை கடல் வழியே இந்த கம்பிவடங்கள் இணைக்க படுகிறது.உலகில் முதன் முதலாக 1866-ல் பெருங்கடல்களுக்கு இடையிலான கம்பிவடங்கள் அட்லாண்டிக் பெருங்கக்கடலில் பொருத்தப்பட்டது.இது செம்பு கம்பிவடம் ஆகும்.சில வருடங்களிலேயே இது செயல்படாமல் போனது.பின்,மீண்டும் 1950 காலங்களில் தொலைபேசி உரையாடல்களை பரிமாற்றம் செய்ய இந்த கம்பிவடங்கள் வந்தது.பின்,1990 காலங்களில் சாதாரண கம்பிவடங்கள் கண்ணாடி இலைகளால்(Optic fibre cable) ஆன கம்பிவடங்களாக உருவேற்றப்பட்டன. இந்த கண்ணாடி இலைகளால் ஆன கம்பிவடங்கள் இலக்கமுறை தரவுகளை(Digital Data) ஒளியின் வடிவில் கடத்திச்செல்லும்.தரவுகள் அனைத்தும் ஒளியின் வடிவில் செல்வதால் தான் இணையம் இத்தனை வேகமாக இயங்குகிறது.

இந்த உலகம் முழுவதும் 99 சதவீதம் தரவுகள் கடலுக்கு அடியில் இருக்கும் கம்பிவடங்கள் வழியே செல்கின்றன.கடலில் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு எவெரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட ஆழமான பகுதிகளில் இவை பதிக்கப்பட்டு உள்ளது.இந்த கம்பிவடங்கள் அனைத்தும் மனிதர்களால் அல்லாமல் பிரத்யேக தானியங்கி  கொண்டும் தானியங்கி நீர்மூழ்கி கப்பல்களை கொண்டும் பதிக்கப்படுகிறது.

வேகம்

செயற்கைகோள்களை விட இந்த கடலுக்கு அடியில் இருக்கும் கம்பிவடங்கள் தரவுகள் அதிவேகத்தில் பரிமாற்றம் செய்கிறது என்று சொன்னால் நம்புவது சிறிது கடினமே.அனால்,அது தான் என்னமோ உண்மை.பூமியின் ஒரு பகுதியில் இருந்து தகவல்கள் அனைத்தும் தரவுகளாக(Data) மாற்றப்பட்டு செயற்கைகோள்களுக்கு அனுப்பப்படுகிறது.பின் செயற்கைகோள் அந்த தரவுகளை மீண்டும் மிகைப்படுத்தி(Amplify) பூமியின் வேறு ஒரு பகுதிக்கு அனுப்பும்.இது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வே.ஆனால்,இந்த செயலில் தரவுகளை பரிமாற்றம் செய்ய அதிகம் நேரம் ஆவது மட்டும் அல்லாமல் சக்தியும் அதிகம் செலவாகிறது.

முன்பு சொன்னது போல் கம்பிவடங்கள் அனைத்தும் கண்ணாடி இலைகளால்(Optic Fibre) ஆனது ஆகும்.இந்த கண்ணாடி இலைகளில் தரவுகள் அனைத்தும் ஒளியின் உருவில் பயணம் செய்வதால் 99.7 சதவீத  ஒளி வேகத்தில் தரவுகள் அனைத்தும் பரிமாற்றம் ஆகிறது.இது நம் நினைத்து பார்க்க இயலாத வேகம் ஆகும்.

கம்பிவடங்களின்  காலாவதி காலம்

2014-ம் ஆண்டின் முடிவு வரை உலகம் முழுதும் சுமார் 285 கம்பிவடங்கள் கடலுக்கு அடியில் இருந்தது.இதில் 22 கம்பிவடங்கள் இன்னும் செயலாற்ற துவங்காமல் உள்ளன.மேற்சொன்ன கம்பிவடங்கள் அனைத்தும் குறைந்தது 25 ஆண்டுகளை காலாவதி காலமாக கொண்டுள்ளன.2018-ம் ஆண்டில் இந்த கம்பிவடங்கள் தரவுகளை கடத்தும் வேகமானது 14 gigabyte தலைவிகதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இணையம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்வதால் தேவைக்கு மேலேயே இந்த கம்பிவடங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்.மேலும் பின்னூட்டம் இட மறவாதீர்.

 

மேலும்  படிக்க: நிலவிலும் செவ்வாயிலும் தாவரங்களால் வளர இயலுமா?

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar