இணைய நடுநிலைமை(Net Neutrality)

இணையத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும்,செயலிகள் மற்றும் பொதுவான சேவைகள் என அனைத்தும் அதன் மூலத்தை பொருட்படுத்தாது(Regardless of source)  இணைய சேவை வழங்குனர்களால்(Internet Service Provider) கட்டணம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்னும் ஒரு நியமமே இணைய நடுநிலைமை  ஆகும்.சில இணைய சேவை வழங்குனர்கள் உள்ளடக்கங்களை தருவதில் பாரபட்சம் காட்டியதால் இந்த நியமம் அமலுக்கு வந்தது.இன்னும் தெளிவான வார்த்தைகளில்,இணைய சேவை வழங்குநர்கள்  நீங்கள் இணையத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தக் கூடாது என்பதே இணைய நடுநிலைமை என்னும்  நியமத்தின் நோக்கம்.

இணைய மேலாண்மை

 

இணைய நடுநிலைமை (Net Neutrality):

இணைய நடுநிலைமை என்னும் நியமத்தை 2002-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராக பணியாற்றிய டிம் வூ உருவாக்கினார்.வெறிசோன்,எ டி&டி  போன்ற இணைய சேவை வழங்குனர்கள்(ISP)  தமக்கு வேண்டிய உள்ளடக்கங்களை மட்டும் வேகமாக காண்பிக்கும் வகையிலும் தமக்கு வேண்டப்படாத  உள்ளடக்கங்களை காண்பிக்கும் நேரத்தை அதிகம் செய்வதன் மூலம்(சில நேரங்களில் இணைய சேவை நிறுவங்களுக்கு பிடிக்காத உள்ளடக்கங்களை முடக்கவும் இயலும்)தவறான வழியில் ஆதாயம் அடைய கூடும்.இந்த காட்சியில் தான் இணைய நடுநிலைமை நியமம் பயனுக்கு வருகிறது.அரசுகள் இந்த நியமத்தை அமலுக்கு கொண்டு வரும் பட்சத்தில் மேற்சொன்ன ISP நிறுவனங்களால் பயனாளர்களுக்கும்  உள்ளடக்கங்களுக்கும் இடையே நிற்க இயலாது.மேலும் சொல்ல போனால் இத்துனை  வருடங்களும் இணையம் யாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாகவே செயல்பட்டது.கடந்த சில வருடங்களாக ISP நிறுவனங்கள் சில இந்த இணைய நடுநிலைமையை தகர்க்கும் பொருட்டு செயல்பட துவங்கியதால் உலகம் முழுதும் இதற்கு எதிராக கடும் எதிர்ப்பு வீச துவங்கியது.

இணைய நடுநிலைமை

படம்:இலவச தகவல் களஞ்சியமான விக்கிபீடியா ISP நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளதை காணலாம்.


இணைய நடுநிலைமையும் வழக்குகளும்:

2014-ம் ஆண்டு உலகின் பெரிய இணைய சேவை வழங்குனர்களில் ஒன்றான வெறிசோன் நிறுவனம் இணைய நடுநிலைமை நியமத்தை ரத்து செய்ய வேண்டுமென வழக்கொன்றை தொடுத்தது.நீதிமன்றம்  இணைய சேவை வழங்குனர்கள் அனைத்து இணைய போக்குவரத்தையும் ஒன்று போல பார்க்க வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்தது.இதையடுத்து  இணைய சேவை வழங்குநர்கள் உள்ளடக்கங்களை காண கட்டணம் விதிக்க துவங்கினர்.

  Verizon Vs FCC (Federal Communication Commision)

“A federal appeals court has struck down important segments of the FCC’s Open Internet rules, determining that the agency doesn’t have the power to require internet service providers to treat all traffic equally.”-The Verge 

           இதன் பின் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் திகதி அன்று இணைய நடுநிலைமைக்கு ஆதரவாக மக்களிடம் நடந்த வாக்கெடுப்பில் மிக பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தன.இதையடுத்து FCC இணைய நடுநிலைமைக்கு ஆதரவாக மீண்டும் நியமங்களை மாற்றி அமைத்தது.இதை தொடர்ந்து 2016-ம் ஆண்டும் பல நிறுவனங்கள் அதை எதிர்த்து வழக்குகள் தொடுத்தன.2015-ம் ஆண்டு நியமங்கள் மாற்றம் கண்டதால் நீதிமன்றம் நியமம் அனைத்தும் இணைய நடுநிலைமைக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னது.

இதையும் படியுங்கள்:இணைய கல்வி பயிற்றுவிக்கும் பத்து தளங்கள் 

2016-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்கா குடியரசு  தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் சூழ்நிலைகள் மாற துவங்கின .டிரம்ப் 2017-ம் ஆண்டின் துவக்கத்தில்  FCC -யின் தலைவராக அஜித்  பாய் அவர்களை நியமித்தார்.அவர் இணைய நடுநிலைமையை(இது இணைய சேவை வழங்குநர்களுக்கு ஆதரவாக இருப்பது குறிப்பிடத்தக்கது) அகற்ற ஒப்புக்கொண்டார்.மீண்டும் 2015-ல் இருந்ததை விடவும் அதிகமான மக்கள் இணைய நடுநிலைமைக்கு ஆதரவு அளித்தும் அதை காக்க வாய்ப்பில்லாமல் போனது.

அஜித் பாய் இணைய நடுநிலைமையை அகற்ற ஒப்புக்கொண்டதிற்கு  சுமார் இரண்டு வாரம் முன் தான் வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அரசு  தொலைத்தொடர்பு நிறுவனமான TRAI இணைய நடுநிலைமைக்கு தன் ஆதரவையும் இந்தியாவில் அதற்கு எதிராக என்றுமே TRAI  செயல்படாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் பகிரவும்.மேலும்  இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிட மறவாதீர்

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar