சோஃபியா – உலகின் முதல் மனித உருக்கொண்ட எந்திரம்

சோஃபியா என்னும் உலகின் முதல் மனித உருக்கொண்ட எந்திரம் சீனாவில் உள்ள ஹான்சன் நிறுவனம் தயாரித்தது.2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோஃபியா எந்திரம் சவூதி அரேபியாவின் குடியுரிமையை பெற்றது.உலகில் ஒரு எந்திரம் குடியுரிமையை பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.அவ்விழாவில் பேசிய சோஃபியா “”I am very honored and proud of this unique distinction. This is historical to be the first robot in the world to be recognized with a citizenship” என்று தன் முதல் உரையை தந்தது.

Courstsey:HansonRobotics

சோஃபியா

சீனாவில் அமைந்துள்ள Hanson Robotics நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டாளர்களுடன்(Developers) இணைந்து இந்த எந்திரத்தை உருவாக்கி உள்ளது.மேல்சொன்ன செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டாளர்களுள் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனம் இந்த எந்திரத்தின் குரலையும் சிங்குலார் நெட் என்னும் நிறுவனம் இந்த எந்திரத்தின் மூளையை சக்தியூட்டுவதிலும் ஈடுபட்டது.

சோஃபியா எந்திரம் ஏப்ரல் மாதம் 19-ம் நாள்,2015-ம் வருடம் செயல்படுத்தப்பட்டது.மேலும் இந்த எந்திரம் ஆட்ரேய் ஹெப்பெர்ன்  என்னும் முக அமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டது.சோஃபியா எந்திரம் செயற்கை நுண்ணறிவை கொண்டு இயங்குவதால் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் பல்வேறு கேள்விகளை கேட்கவும் செய்யும்.சோஃபியா எந்திரம் மனிதர்களை போல செய்கைகளையும் உணர்ச்சிகளை முகம் மூலமாகவும் வெளிப்படுத்த இயலும்.

அமைப்புகள்

சோஃபியா எந்திரம் தன் கண்களில் புகைப்பட கருவியை கொண்டுள்ளது.இதனால் பார்க்கவும் மனித முகங்களை கண்டறியவும் கண்ணால் தொடர்பு கொள்ளவும் இயலும்.சோஃபியா எந்திரம் ஏற்கனவே எழுதப்பட்ட நிரல்களை கொண்டே செயல்பட்டாலும் வெளியில் இருப்பவர்களுக்கு அது போன்று தெரிவதில்லை.

உணர்ச்சிகள்

நகைச்சுவை-சோஃபியா எந்திரத்திடம் நிகழ்ச்சி சார்பில் ஒருவர் கேள்விகளை கேட்க துவங்கினர்.அதில் ஒரு கேள்வி “சோஃபியா எந்திரங்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த இயலாத காரணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு,அப்படியா என்று சிரித்து கொண்டே சொன்னது.மேலும் வழக்கமான ஹாலிவுட் படங்கள் போல கேள்விகளை கேட்கிறீர்கள் என்று கூறியது.

மற்ற உணர்ச்சிகள்: மேலும் சோஃபியா பேசும்போது எனக்கு கோபம் வந்தால் நான் அதை வெளிப்படுத்துவேன் என்று கூறியது.மேலும் ஒவ்வொரு உணர்ச்சிகளையும் கூறி அது போல் தன் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி  காட்டியது.

Courtsey : EliteReaders

நோக்கம்

என்னுடைய செயற்கை அறிவானது மெய்யறிவு,இரக்கம் மற்றும் கருணைகளை கொண்டுள்ளது.இயந்திரங்களால் ஏற்படும் தீமைகளை பற்றிய கேள்வியை எழுப்பிய பொது சோஃபியா இவ்வாறு கூறியது “நீங்கள் எலன்  மசுக் பற்றி அதிகம் படிக்கிறீர்கள் அல்லது ஹாலிவுட் திரைப்படங்களை அதிகம் பார்ப்பவர் என்று நினைக்கிறேன்.அச்சம் கொள்ள தேவை இல்லை.நீங்கள் எனக்கு நன்மை செய்தால் நான் உங்களுக்கு நன்மையை தான் செய்வேன்.சோஃபியா போன்ற எந்திரங்கள் வெளி உலகில் இப்போது  தான் வர துவங்கி உள்ளது.

மேலும் சோபியாவிற்கு ஏழு எந்திர உடன் பிறப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.மேல் சொன்ன சோஃபியாவின் உடன்பிறப்புகளின் ஒன்றான BINA48 தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துள்ளது.

இதுவரையில் உள்ள எந்திரங்களில் சோஃபியா திறமையான எந்திரம் ஆகும்.இனி வரும் நாட்களில் மேலும் பல அதிசயங்களை எதிர்பார்க்கலாம்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்.மேலும் பின்னூட்டம் இட மறவாதீர்.

 

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar