அமேசான் நிறுவனத்தின் வெற்றி கதை

                 1991-ம் ஆண்டு இந்த உலகத்தில் உலகளாவிய வலை(World Wide Web) சற்றே பிரபலமான நேரம்.அமெரிக்கா மற்றும் சில வளர்ந்த நாடுகளை தவிர இணையத்தை பற்றி பலருக்கு தெரியாமல் தான் இருந்தது.அப்போது மின் வணிகம்(E-Commerce) எந்த அளவு மக்களிடம் தெரிந்து இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?.இந்த நிலையில் தான் கணினி அறிவியல் படித்த கண்களில் லட்சிய கனவுகள் கொண்ட ஜெஃப் பேசாஸ் என்பவர் அமேசான் என்ற வலைத்தளத்தை துவக்கினார்.இன்று உலகம் முழுதும் மின் வணிகத்தில் அசைக்க முடிய பலத்தோடு விளங்கும் அமேசான் நிறுவனம் அன்று அப்படி இருக்கவில்லை.எதிர் காலத்தில் அமேசான் என்ற ஒரு நிறுவனத்தை பற்றி பல வெற்றி கதைகளும் பல நூல்களும் பெருமையுடன் பேசும் என்று யாருக்கும் நினைக்க தோன்றவில்லை.காரணம் மின் வணிகத்தின் மேல் அன்று அந்தளவுக்கு மோகம் இருக்கவில்லை.மேலும்,இன்று 6.8 பில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துவதை போல் அன்றில்லை.அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் சனவரி மாதம் 12-ம் தேதி1964-ல் பிறந்த ஜெஃப் பேசாஸ் அமேசான் நிறுவனத்தை துவங்கி வெற்றி பாதையில் செலுத்தியதை பற்றிய பதிவு இது.

அமேசான் நிறுவனத்தின் தலைவர்
ஜெஃப் பேசாஸ்

1994-ம் ஆண்டு நியூயார்க் இதழ் வெளியிட்ட செய்தி குறிப்பில் “இணையம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகள் பொய்யானதா?.இந்த கேள்வியை அந்த நாளிதழ் முன் வைக்க காரணம் அன்றே சுமார் இணையத்தை இரண்டு கோடிக்கும் மேல் பயன்படுத்த துவங்கி இருந்தனர்.ஜெஃப் பேசாஸ் ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை முடித்து கொண்டு சில நிறுவங்களில் பணியாற்றி கொண்டு இருந்தார். தான் பணியாற்றிய நிறுவனத்தின் வேலை காரணமாக இணையத்தில் ஏதோ ஒன்று துளாவி கொண்டிருந்த பொழுது வந்த ஒரு யோசனையை தன் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்தார்.அவர்களும் ஆதரவு தரவே தன் வீட்டிலேயே சிறு Cadabra.com நிறுவனத்தை துவங்கினார்.இந்த புதிய நிறுவனத்தின் பிரதான நோக்கம் நூல்களை விற்பனை செய்வதாக இருந்தது.இதற்காக நூலகம் அளவிற்கு நூல்களையும் நிறுவனம் வைத்திருந்தது.

மேலும் படியுங்கள்: இணைய நடுநிலைமை(Net Neutrality)

அமேசான் வெற்றி கதை:

தன் நிறுவனத்தின் சட்ட ஆலோசகரிடம் ஜெஃப் உரையாடி கொண்டிருக்கும் பொழுது அந்த ஆலோசகர் “ஏன் நிறுவனத்தின் பெயர் விசித்திரமாக இருப்பதாக உரைத்தார்”.சிறிது நாள் கழித்து தன் நிறுவனத்தின் பெயரை Amazon.com என்று மாற்றினார்.நிறுவனத்தின் முதல் சில மாதங்களிலேயே மக்களிடம் வெகுவான பாராட்டுக்களை பெற்றது.ஒரு நிறுவனம் வெற்றிகரமான நோக்கத்தையும் வெற்றிகரமான செயல்பாட்டையும் கொண்டு இருக்குமானால் அதே போல் பல நிறுவனங்களும் செய்து போட்டியை தரும் என்று ஜெஃப் புரிந்து கொண்டார்.மற்ற நிறுவனங்களிடம் இருந்து தன் நிறுவனத்தை மாறுபடுத்தி காட்ட இரண்டு உத்திகளை பயன்படுத்தினார்.ஒன்று புதுமை மற்றும் அளவு.1995-ம் ஆண்டின் இறுதி வருவதற்குள் அமேசான் வாரத்திற்கு இருபதாயிரம் டாலர்களை 45 நாடுகளில் விற்பனை செய்வதன் மூலம் ஈட்டியது.நிறுவனத்தின் வளர்ச்சியை கண்ட ஜெஃப் தன் நிறுவனத்தின் பங்குகளை பங்கு வர்த்தகத்தில் Initial Public offering வழியில் முதலீடுகளை முடிவு செய்தார்.நாளுக்கு நாள் இணையம் வெகு வேகமா வளர்ந்து வருவதை கண்ட ஜெஃப் “வேகமாக நிறுவனத்தை பெரிதாக்க வேண்டும்” என்ற இலட்சியத்தை கொண்டார்.

1998-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக அதிகமான விற்பனைகள் நிகழ்ந்தன.நிறுவனத்தில் பணியாட்கள் குறைவாகவே இருந்ததால் மிக சிரமமான பணியாகவே இது இருந்தது.அன்றில் இருந்து அமேசான் நிறுவனம் பருவ வேலையாட்களை அதிகளவு சேர்த்து கொண்டது.அமேசானின் பாதை வளர்ந்து கொண்டே போனது.2001-ல் ஏற்பட்ட Dot Com Bubbleலில் கூட எந்த பெரிய சரிவும் இல்லாமல் பயணித்தது.2004-ம் ஆண்டு கூகுளை போன்றே A9.com என்ற தேடு பொறியினை அறிமுகம் செய்தது அமேசான்.மேலும் இந்த A9இல் பணி செய்யும் குழுவினர் Block View என்ற பெயரில் இணைய வரைபடங்களை(Google Maps போன்று) அறிமுகம் செய்தது.இதன் பின்பு தான் கூகிள் street view வந்தது.2006-ம் ஆண்டில் Block view திட்டம் அமேசானால் கைவிடப்பட்டது.

இதன் பின் kindle நூல்கள்,AWS என்று பல்வேறு புது சேவைகளின் உதவியை கொண்டு தன் எல்லையை விரிவாக்கி கொண்டது.இன்று உலகின் மிக பெரிய மின் வணிக தளமாக அமேசான் விளங்குகிறது.

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar