நிலவிலும்,செவ்வாயிலும் தாவரங்களால் வளர இயலுமா?

மனித இனம்  கோள்களுக்கு இடைப்பட்ட இனமாக (Inter-Planery Species) மாற துடிக்கிறது.அதன் விளைவாகவே செவ்வாயிற்கும் நிலவிற்கும் மாறி மாறி விண்கலங்களை செலுத்தி வருகிறது.நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இதற்கு அதீத முக்கியத்துவம் தருவது போன்று தோன்றினாலும் இவர்கள் மற்றும் அல்லது உலகில் உள்ள பல விண்வெளி ஆய்வு நிறுவங்களும் இந்த போட்டியில் உள்ளன. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் புரிகிறது,2030-ம் ஆண்டிற்குள் செவ்வாயில் மனிதன் கால் பதிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.நிலவானாலும் செவ்வாய் ஆனாலும் மனிதன் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை அமையவில்லையெனில் அனைத்தும் பயனற்று போய்விடும்.அந்த சூழ்நிலையில் மிக முக்கியம் உணவு.செவ்வாயிலோ நிலவிலோ மனிதர்கள் வாழ துவங்கும் பட்சத்தில் பூமியில் இருந்து மேக் டொனல்ட்ஸ் வழியாக உணவை தருவித்து கொள்ள இயலாது(அப்படி நடந்தாலும் வியப்பதற்கு எதுவும் இல்லை).ஆகவே,உணவை பெறுவதற்கு தாவரங்களை வளர்ப்பதை தவிர வேறு வழி இல்லை.நம் பூமியில் தாவரங்கள் வளர ஏதுவான சுற்று சூழல் உள்ளது.அனால்,நிலவிலும் செவ்வாயிலும் நிலைமை நேருக்கு எதிர்.இதை பற்றி செயல்முறை ஆய்வுகளை செய்ய வெக்மான் முதலான பல ஆராய்ச்சியாளர்கள் ஒன்று கூடினர்.

                               படம்:நாசா விண்வெளி நிறுவனம்

நிலவிலும் செவ்வாயிலும் உள்ள  மண் தன்மை

பல வருடங்களாக நிலவிலும் செவ்வாயிலும் நடந்த பல்வேறு மண் தொடர்பான ஆய்வுகளின் தரவுகளை கொண்டு இந்த செயல்முறை துவங்கப்பட்டது.அந்த தரவுகளில் நிலவிலும் செவ்வாயிலும் கற்கள் மட்டும் அல்லாது அதிக அளவில் மணல் போன்று இருக்கும் மண் மற்றும் பல்வேறு மண்ணெடுப்பு அடுக்குகள்(Regoliths) இருப்பது உறுதியானது.மேலும் தாவரங்கள் வளர தேவையான கனிமங்கள்(எதிர்வினை நைட்ரோஜென் தவிர) இருப்பது உறுதியானது.பூமியில் இந்த எதிர்வினை நைட்ரோஜென்(Reactive Nitrogen) கரிம பொருள்கள் கனிமப்படுத்தலால் (Mineralisation of organic matter)மண்ணிற்குள் சென்றைடைகிறது.செவ்வாயிலும் நிலவிலும் இதற்கு வாய்ப்புகள் இல்லாததாலேயே அதன் மண்ணில் இது காணப்படுவதில்லை.இருந்தாலும் நம் சூரிய குடும்பத்தில் நிகழும் சூரிய புயல்களில்(Solar Wind)  இருந்து இந்த எதிர்வினை நைட்ரோஜெனை  செவ்வாய் மற்றும் நிலவு பெற வாய்ப்புகள் உள்ளன.ஆனால்,செவ்வாயில் நடந்த ஆய்வுகளில் அதன் எச்சம் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.இதற்கு மாற்றாக Nitrogen Fixation பாக்டீரியாவை கொண்டு வளி மண்டலத்தில் உள்ள நைட்ரோஜெனை மண்ணில் கலக்க இயலும்.

பாதிக்கும் தன்மைகள்

பூமியை தவிர மற்ற கோள்களின் மண்ணில் குரோமியம் மற்றும் அலுமினியம் மூல கூறுகள் அதிகம் உள்ளன.அலுமினியம் மூல கூறுகள் அதிகம் உள்ள மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கான சாத்திய கூறுகள் குறைவே.மேலும் அலுமினியம் கூறுகள் தாவரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல் அதை அளிக்கவும் செய்கின்றன.தாவரம் வளர மிக முக்கியமான மூல கூறு தண்ணீர்.செவ்வாய் மற்றும் நிலவில் தண்ணீர் திரவத்தன்மையில் இல்லாமல் பனியாக உள்ளது.அனால் வரும் காலத்தில் இதை கொண்டு தாவரங்கள் வளர செய்ய இயலும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.தக்காளி போன்றவற்றை தண்ணீர் கொண்ட தொட்டிகளில் வளர்க்க முடியும் என்றாலும் அனைத்து தாவரங்களையும் அந்த முறையில் வளர்க்க இயலாதது பாதிக்கும் தன்மைகளாக உள்ளன.

செயல்முறைகள்

நிலவில் அப்போல்லோ விண்கலங்கள் மூலமாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.அனால்,மண் சார்ந்த ஆய்வுகளும் அதன் தன்மை சார்ந்த ஆய்வுகளும் குறைவாகவே நடத்தப்பட்டன.இதனால் நிலா மற்றும் செவ்வாயின் மண் போன்ற மாதிரிகளை கொண்டு செயல்முறைகள் நடத்தப்பட்டன.எரிமலை மண் செவ்வாய் மற்றும் நிலவின் மண் போன்று பொருத்தங்களை கொண்டுள்ளதால் அந்த மண் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்டது.மேலும் 10 மீட்டர் ஆழத்தில் ரைன் நதியின் மண் செயல்முறைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.ரைன் நதியின் மண் ஆனது கனிம வளங்களை குறைவாக கொண்டு இருந்ததால் அது தேர்ந்து எடுத்துக்கொள்ளப்பட்டது

 

விளைவுகள்

குறிப்பிட்ட சில தாவரங்களின் விதிகள் நிலா மற்றும் செவ்வாயின் மண் மாதிரிகளில் இடப்பட்டது.அதில் Common Vetch என்று அழைக்க படும் கால்நடை தீவன செடியானது நிலவின் மண்ணில் சற்றும் வளராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் நிலவின் மண்ணை விட செவ்வாயின் மண்ணில் மற்ற தாவரங்கள் விரைவாக வளர்வது கண்டுபிடிக்கப்பட்டது.விதைகளின் முளைக்கட்டுதலிற்கு அந்த விதையின் தரமும் ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.விதை முளைத்து இலைகள் வளருமான பருவத்தை செவ்வாயின் மண்ணில் இடப்பட்ட விதைகள் வேகமாக எட்டின.நிலவின் மண்ணில் இடப்பட்ட விதைகள் சற்று தாமதமாகவே எட்டின.மேலே சொன்னதை போன்று தாவரம் வளர வளர சில இறக்க துவங்கின.பூக்கும் தருணம் வரை செவ்வாயின் மண்ணில் இடப்பட்ட விதைகள் எட்டின.

இந்த செயல்முறையின் விளைவாக செவ்வாயின் மண்ணில் இடப்பட்ட விதைகள் வேகமாக தாவரமாக வளர்ந்தன என்று முடிவிற்கு வரமுடிகிறது.அப்போது  நிலவின் மண்? அதற்கு நேர் எதிராகவே அதன் முடிவுகள் இருந்தன.

மேலும் இதை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை படியுங்கள் 

இந்த கட்டுரை பற்றி பின்னூட்டத்தை இட மறவாதீர்.மேலும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

 

இதையும் படியுங்கள்:இணைய நடுநிலைமை

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar