படிக்க வேண்டிய நூல்கள்-2018

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த உலகம் பலவற்றை நமக்கு கற்று கொடுத்து அறிவை செழிப்புற வளர செய்கிறது .கடந்த காலம்,நிகழ்காலம்,வருங்காலம் இந்த உலகம் பெற்ற  தலைச்சிறந்த ஆசிரியர்கள் .ஆசிரியரின் முதன்மை நோக்கமும் அறிவை தருவதே.மொத்தத்தில் அறிவே அனைத்திற்கும் மூலம் என்பதை நாம் இதன் மூலம் உணரலாம்.அறிவை பெறுவதற்கு வேறு வழிகள் இல்லையா?.மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட நூல்கள் தாம் அந்த வழி.நூல்கள் சிறிதும் சுயநலம் இல்லாமல் அறிவை பொங்கி வழிய செய்து மனிதனை ஏற்று கொள்ள அழைக்கிறது.அப்படி,அதை அந்த நூல்களை  ஏற்று கொண்ட மனிதர்கள் இந்த உலகில் பிளட்டோவாக, எடிசனாக,ஐன்ஸ்டீநாக,நெல்சன் மண்டேலாவாக இந்த உலகத்தை மட்டும் அல்லாமல் மக்களின் மனங்களையும் ஆட்சி புரிந்தார்கள்.நூல்களை பற்றிய பழமொழி ஒன்றுள்ளது

“அணு ஆயுதங்கள் ஒரு முறை தான் வெடிக்கும்

ஆனால் நூல்கள் ஒவ்வொரு முறை திறக்கும்போதும் வெடிக்கும்”

 

2018-ம் ஆண்டு மறக்காமல் படிக்க வேண்டிய நூல்கள்

 

 

அத்தைகைய மேன்மை பொருந்திய நூல்களை நாம் இன்னும் கட்டி தழுவாமல் இருப்பது மடத்தனமே.இந்த 2018-ல் நீங்கள் மறக்காமல் கட்டி தழுவ வேண்டிய  ஆங்கில நூல்கள்(தமிழ் நூல்கள் அடுத்த பதிவில்) இந்த பதிவில்.

நூல்கள்-2018

1.Genghis khan and the making of the Modern World – By Jack Weatherford:

வரலாற்று நூல்கள்,தற்காலத்தை  கட்டமைக்க கடந்த காலம் எவ்வாறு உதவி உள்ளதென்பதை அறிய வழி வகுக்கிறது.மாவீரர்கள்,போர்கள் என அனைத்தையும் கண் முன் கொண்டு வருவதும்  வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலையும் தருகின்றதுஅத்தகைய வரலாற்று விரும்பிகள் இந்த உலகில் அதிகம் .கல்வி சாலையில் நீங்கள் வரலாற்றை விருப்பத்துடன் கற்றவராக இருக்கலாம்.ஆனால்,அந்த வரலாற்று வகுப்பில் ஒரு வேலை நீங்கள் மேற்கு ஐரோப்பா பற்றியோ மாவீரன் செங்கிஸ் கான் பற்றியோ நீங்கள் அறியவில்லையெனில் இந்த நூல் உங்களுக்கானது.மிக சிறந்த தலைமை பண்பு,கூரிய போர் செய்யும்  திறன்,யாவராலும் கணிக்க முடியாத  வியூகம் என வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற மொங்கோலியா அரசனான செங்கிஸ் கானை பற்றிய வியக்கத்தக்க அளவில் ஒளியூட்டுவதாக இருப்பதாக இந்த நூல் உள்ளதென விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2.Hit Refresh-Satya Nadella:

“நீங்கள் உலாவியில்(Browser) புதுப்பித்தல் பொத்தானை அழுத்தும்போது ,உலாவியின் முகப்பு பக்கத்தில் மாற்றம் நிகழாமல் செயல் திறன் மட்டும் மாற்றம் கொள்ளும்.அதுபோல தான் சத்ய நாடெல்லாவும் எங்கள் நிறுவனத்திற்கு புதுப்பித்தல் செயலை துவங்கினார்” என்று பில் கேட்ஸின் முன்னுரையோடு இந்த நூல் துவங்குகிறது.மைக்ரோசாப்டின் மூன்றாவது செயல் தலைவரான சத்ய நாடெல்லா தலைமைத்துவம் பற்றிய மாறுப்பட்ட கண்ணோட்டங்களை இந்த நூலில் பதிவு செய்கிறார்.ஒரு சாதாரண மனிதனாக இருந்து உலகின்  மிக பெரிய நிறுவனத்திற்கு செயல் தலைவர் ஆன  இவர் தனது அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் இந்த நூலின் வழியாக சொல்கிறார்.இந்நூல் 2017-ல் வெளிவந்திருந்தாலும் 2018-ல் கூட படிக்க நூல்கள் பட்டியலில் இருப்பதற்கு அத்தனை தகுதியானது.

2018-ல் படிக்க வேண்டிய நூல்கள்

3.Your best year-Michael Hyatt:

நியூயார்க் இதழ் வெளியிடும் சிறந்த நூல்கள் பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றுள்ளது.ஹையட் தொழில் அதிபர் மற்றும் சிறந்த  தலைமை அதிகாரி ஆவார் .இந்த  நூலில் இலக்குகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் அதை அடைவதை பற்றியான நுணுக்கங்களை  சொல்கிறார்.ஒவ்வொரு நாளும் நாம் நம் இலக்கை அடைவதில் எப்படி பின் தங்குகிறோம் என்பதையும் அதை களைய திட்டங்களையும் இந்த நூல் மூலம் ஆசிரியர் தருகிறார்.

noolgal 2018

 

4.The Culture Code:The Secrets of Highly succesful groups-Daniel Coyle:

வெற்றி பெறுவது போன்று கனவு காணாதவர் இந்த உலகில் வெகு சிலரே.அப்படி நீங்களும் கனவு காண்பவர்களில் ஒருவர் நீங்கள் எனில் இந்த நூல் உங்களை உண்மை வாழ்வில் வெற்றி பெற செய்ய இந்த நூல் ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் கேள்வியில்லை.ஆடம் கிராண்ட் போன்ற வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த நூல் மிகச்சிறந்த வெற்றி மனிதர்களின் வெற்றிக்குப்பின் உள்ள சுவாரசியமான ரகசியங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில்  கதைக்கிறது.

2018 நூல்கள்

 

5.Secrets we kept-Krystal A sital:

பெண்ணியம் சார்ந்த நூல்கள் என்றுமே பலரின் கவனத்தை ஈர்க்க தவறுவதில்லை.பெண்ணியம் சார்ந்த பல அமைப்புகள் செயல்பட துவங்கியது முதல் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும் மக்களிடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அமெரிக்கா,ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த நிலை காணப்பட்டாலும் இன்னும் வளர்ச்சியின் துவக்கத்தில் இருக்கும் லத்தீன் அமெரிக்கா நாடுகள்,ஆப்பிரிக்கா நாடுகள்,ஆசியா நாடுகளில் இன்னும் பரவலாக பேசப்படாத தலைப்பாகவே பெண்ணியம் உள்ளது.இதை மாற்ற வந்த சில நூல்களுள் ஒன்று இது. 2018ல் பெண்ணியம் சார்ந்த நூல்களுள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நூல் இது . இலத்தின்    அமெரிக்க நாடான  ட்ரினிடாட் நாட்டில் வாழும் பெண்களை பற்றி பேசும் நூலாக இது உள்ளது.

2018 நூல்கள்

உங்களின் மேலான கருத்துக்களையும் நூல்களின் பரிந்துரைகளையும் பின்னூட்டம் இட வேண்டுகிறோம்.

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar