பிட்காயின்

பிட்காயின் என்பது 2009-ல் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம் ஆகும்.சடோஷி நாகமோட்டோ என்னும் முகமறியா நபரால் உருவாக்கப்பட்டது.இவர் யார் எங்கு உள்ளார் என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை.குறியாக்க நாணயங்களில் ஒன்றான பிட்காயின் நடுநிலையாக்கப்படாத நாணயம் ஆகும்.பிட்காயின் நாணயம் பயனர் – பயனர் முறையில் இயங்குவதால் இதன் இயக்கத்தின் இடையில் யாரும் இருப்பதில்லை.பிட்காயின் பரிமாற்றம்  அனைத்தும் பிளாக் செயின் தொழிநுட்பத்தின் உதவியுடன் பேரேட்டில்(Ledger) பதிவாகிறது.

பிட்காயின்

பிட்காயின்

2008-ம் ஆண்டு Bitcoin.Org என்னும் தளம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.முன்பே கூறியது போல பிட்காயின் நாம் அனைவரும் தினசரி பயன்படுத்தும் நாணயங்களை போல் இல்லாமல் தொடவோ உணரவோ முடியாத மெய்நிகர் நாணயம்(Digital or Virtual Currency) ஆகும்.பிட்காயின் நிரல்களால்(Codes) எழுதப்பட்டது.மேலும் வாங்கப்பட்ட அல்லது கொள்முதல் செய்யப்பட்ட பிட்காயின்கள் அனைத்தும் விரி பணப்பையில்(Wallet) சேமிக்கப்படும்.

பிட்காயின் தொடர்பான தளங்கள் 

  • 99bitcoins.com : 99bitcoins தளம் காணொளிகளின் மூலமாகவும் உரைகளின் மூலமாகவும் பிட்காயின் பற்றிய பயிற்சிகளை அளிக்கிறது.
  • bitcoin.org : bitcoin தளம் மூலம் கைபேசி,கணினி மற்றும் பல்வேறு சாதனங்களில் உங்கள் பணப்பையை பயன்படுத்திக்கொள்ள இயலும்.
  • blockchain.info : blockchain தளத்தின் மூலம் பிட்காயின் பரிவர்த்தனைகளை தெரிந்துகொள்ள இயலும்.
  • We use coins : இத்தளத்தின் மூலம் உலகம் முழுவதும் பிட்காயின் கொண்டு பரிவர்த்தனைகளை செய்ய இயலும்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்.மேலும் பின்னூட்டம் இடுங்கள்

 

மேலும் படியுங்கள் : செயற்கை நுண்ணறிவு 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar