விஸ்வநாதன் ஆனந்த்

சதுரங்க போட்டியில் மறக்க இயலாதவரும் உலக சதுரங்க போட்டியின் வாகையரும் தமிழருமான  விஸ்வநாதன் ஆனந்த் டிசம்பர் 11-ம்,1969- ம்  வருடத்தில் சென்னையில்(அப்பொழுது மெட்ராஸ்) பிறந்தார்.இவர் தன் ஆறாம் வயதில் தன் தாய் சுசிலாவிடம்(இவரும் சதுரங்க ஆட்டக்காரர்) இருந்து சதுரங்கம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.ஆனந்த் சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் தன் பள்ளி படிப்பையும்,நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தன் இளங்கலை படிப்பையும் பயின்றார்.பின்,சதுரங்கம் மேல் இருந்த அதீத பற்றால் சதுரங்கத்தையே தன் வாழ்க்கையாக கொண்டார்.

“வாழ்க்கைக்கும் சதுரங்கத்திற்கும் உள்ள வேறுபாடு

சதுரங்கத்தில் அரசன் இறந்தால் நாமும் இழப்போம்

வாழ்க்கை அதற்கு மாறானது”.

பெரும்பாலான சதுரங்க போட்டிகள் ஸ்பெயின் நாட்டை சார்ந்துள்ள பகுதிகளில் நடப்பதால் ஆனந்தும் பெரும்பாலும் அங்கே இருப்பார்.சதுரங்க போட்டி குறைவாக இருக்கும் வருடத்தின் இரண்டாம் பகுதியில் சென்னையில் இருக்கும் பழக்கம் கொண்டவர்.விஸ்வநாத் ஆனந்தை பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது

மேலும் படியுங்கள்:இணைய நடுநிலைமை(Net Neutrality)

  1. சதுரங்க நாயகன் விஷி

விஸ்வநாதன் ஆனந்த் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் இவருக்கு விஷி என்னும் புனைபெயரும்        உள்ளது.

     2. முதல் கிராண்ட் மாஸ்டர்

இந்தியாவில் சதுரங்கம் ஆடுபவர்கள் குறைவாக இருந்த காலத்திலேயே ஆனந்த் 1988-ல்  இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

     3.பொழுதுபோக்குகள்

ஆனந்த் நூல்கள் வாய்ப்பது,நீச்சல் மற்றும் இசை கேட்பது போன்ற செயல்களை பொழுதுபோக்குகளாக கொண்டவர்.

      4.ஆஸ்கார்

சதுரங்க போட்டியில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் சதுரங்க ஆஸ்கார் விருதை ஆறு முறை பெற்றுள்ளார்.

      5.ராஜிவ் கேல் ரத்னா

இந்தியாவில் விளையாட்டு துறைக்கான மிக உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருதை முதன் முறையாக பெற்றவர் ஆனந்த்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar