ஃபால்கான் ஹெவி-ஸ்பெஸ் எக்ஸ்-இன் மற்றுமொரு சாதனை

பிப்ரவரி 6,2018-ம் நாள் விண்வெளி மற்றும் விண்வெளி ஆய்வு மீது மோகம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த நாளாகவே இருந்தது.எலன் மசுக் தலைமையிலான ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் தன்னுடைய நீண்ட நாள் திட்டமான ஃபால்கான் ஹெவி ராக்கெட்டை வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தியது.இதன் மூலம் செவ்வாய் கோளிற்கு மனிதனை அனுப்பும்  வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த உலகத்திற்கு அறிய செய்துள்ளது ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம்.அவ்வளவு முக்கியத்துவம் பெற இந்த ஃபால்கான் ஹெவி ராக்கெட்டில் என்னதான் உள்ளது.மற்ற ராக்கெட்டில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது?

ஃபால்கான் ஹெவி ராக்கெட்

ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் சில வருடங்களாகவே மறுபயன்பாடு ராக்கெட்களை தயாரித்தும் சோதித்து வருகிறது.இதனால் பெரும் பகுதியான பணம் விரயம் தடுக்கப்படுவதுடன் நேரமும் மிச்சமாகிறது.இந்நிலையில் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கான் ஹெவி என்னும் உலகிலே அதிக எடை கொண்ட ராக்கெட்டினை செலுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது.இந்த ஃபால்கான் ஹெவி ராக்கெட் சோதனை செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டே செய்தது ஆகும்.சுமார் 64 மெட்ரிக் டன்கள் வரை எடையை சுமந்து கொண்டு விண்வெளிக்கு செல்லும் ஆற்றல் கொண்ட இது இப்போதைய தேதியில் உலகில் அதிக எடையை சுமந்து செல்லும் மிக பெரிய ராக்கெட்டாக கருதப்படுகிறது.ஃபால்கான் ஹெவி ரொக்கெட்டிற்கான திட்டம் 2011-லே வகுக்கப்பட்டாலும் பல்வேறு காரணங்களால் தள்ளி போனது.இறுதியாக பிப்ரவரி 6-தேதி,2018-ல் செலுத்தப்பட்டது.

டெஸ்லா மகிழுந்து

ஃபால்கான் ஹெவி ராக்கெட் இன்னோரு சிறப்பையும் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்துள்ளது.வழக்கமாக அனைத்து ராக்கெட்களும் செயற்கைகோள்களை சுமந்து கொண்டு விண்ணில் பாயும்.ஆனால்,இது சோதனை ஓட்டம் என்பதாலேயே செயற்கைகோளிற்கு மாற்றாக எலன் மசுக்கின் டெஸ்லா மகிழுந்தை(Car) சுமந்து கொண்டு சென்றுள்ளது.மேலும்,டெஸ்லா மகிழுந்தின் ஓட்டுநராக மனித உருவில் ஒரு பொம்மையை அமர்த்தி வைத்துள்ளது ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம்.இந்த மகிழுந்து வழக்கமான செயற்கை கோளை போலவே செவ்வாய்க்கோளை சுற்றி வரும்.

மனித இனத்தை பாதுகாத்தல்

பலருக்கு தெரியாத ஆச்சர்யமான விடயத்தையும் டெஸ்லா மகிழுந்தில் வைக்கப்பட்டுள்ளது.ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் ஆர்ச் என்னும் தட்டை(Disc) டெஸ்லா மகிழுந்தில் வைத்துள்ளது.இந்த ஆர்ச் தட்டால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு பல்வேறு தட்பவெப்பங்களையும் தாங்கி இருக்க இயலும்.இந்த ஆர்ச் தட்டில் 360 டெரா பைட் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளது.மேலும்,மனித இனத்தை பற்றியான அடிப்படை தகவல்களை பற்றியும் மனித இனத்தை பாதுகாப்பது குறித்தான ஐசக் அசிமோவின் படமும் இதில் இடம் பெற்றுள்ளது.இது மில்லியன் ஆண்டுகளுக்கு விண்வெளியில் சுற்றும் என்பதால் எதிர்காலத்தில் வேற்று உயிர்களுக்கு மனிதர்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஒரு எச்சமாகவும் இது பயன்படும்.

                                   Courstey : Time 

ஸ்பெஸ் எக்ஸ்-இன் அடுத்த திட்டங்கள்

ஸ்பெஸ் எக்ஸ்-இன் அடுத்த திட்டங்கள் பற்றி எலன் மசுக்யிடம்  நிருபர்கள் கேட்டதற்கு எங்களின் அடுத்த இலக்காக பிக் ஃபால்கான் ராக்கெட்டாக(BFR) இருக்கும்.மேலும் எண்களின் அடுத்த  ஃபால்கான் ஹெவி ராக்கெட் எப்பொழுது செலுத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்.மேலும்,விண்வெளி பயணங்கள் பற்றி கூறும்போது “எங்களுக்கு விண்வெளி பயணத்துக்கான பந்தயம் உற்சாகத்தை தந்துள்ளது.மேலும் இந்த பந்தயங்கள் அதிகரிக்க வேண்டும்”.

வணிக நோக்கில் ரொக்கெட்களை செலுத்தும் பணிகளும் இப்பொழுது உள்ளது.விரைவில் சில நாடுகளின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவோம்.எங்கள் திட்டங்கள் அனைத்தும் விரைவில் வடிவு பெரும் என்றும் அவர் கூறினார்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டம் இடவும் மேலும் பகிரவும்.

மேலும் படிக்க : நீயூட்ரினோ- புதிரா அல்லது ஆச்சர்யமா?

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar