நியுட்ரினோ-அறிவியல் ஆச்சர்யமா அல்லது புதிரா?

இந்த பிரபஞ்சம் முழுதும் மர்மங்களால் நிறைந்தது.உலகின் பெரும் அறிவியல் அறிஞர்களால் நினைத்து கூட பார்க்க இயலாதவாறு இருள் பொருள்களை (Dark Matter) கொண்டது.அப்படிப்பட்ட ஆச்சர்யங்களில் ஒன்று தான் நியுட்ரினோ(Neutrino).இயற்பியல்,வானியல் என பல்வேறு துறைகளின் உதவியுடன் நீயுட்ரினோக்களை கடந்து நூற்றாண்டு முதல் பலர் ஆராய துவங்கினர்.நியுட்ரினோ ஒரு வினோத தன்மை கொண்ட பொருளாக இருப்பதால் தான் என்னமோ இது பலரின் பார்வையை தன் மீது இழுத்துள்ளது.உலக நாடுகள் பல போட்டி போட்டுகொண்டு இதைப்பற்றி ஆராயச்சிகளை செய்யும் அளவிற்கு இது கவனத்தை பெற்றுள்ளது.நியுட்ரினோ என்றால் தான் என்ன? அது முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம் என்ன? நியுட்ரினோவினால் அப்படி என்னத்தான் பயன் விளைய போகிறது?

இந்த கட்டுரை நியுட்ரினோ பற்றிய ஒரு முன்னுரை ஆகும்

Courstey : Discover Magazine

 நியுட்ரினோ

நியுட்ரினோ மின்னேற்றம் இல்லாத (No Electric Charge) ஒரு துணை அணு துகள்(Sub-atomic particle) ஆகும்.நியுட்ரினோ மற்ற துணை அணு துகள்களான புரோட்டான்,எலக்ட்ரான் மற்றும் நியுட்ரான்(Proton,Electron and Neutron) போன்று அல்லாமல் நிறை அற்ற பொருளாக கருதப்படுகிறது(A Particle Without Mass).கடந்த சில ஆண்டுகளாக சில ஆய்வாளர்கள் நியுட்ரினோ மிக சிறிய நிறையை கொண்டுள்ளதாக வாதிட்டு வருகின்றனர்.மேலும்,நியுட்ரினோ பற்றிய ஆய்வுகள் அனைத்தும் இன்னும் துவக்க நிலையில் இருப்பதால் நிறையற்ற தன்மைக்கான காரணங்களை இன்னும் யாராலும் விளக்க இயலவில்லை.நியுட்ரினோ பற்றி முக்கியமான விடயம் என்னவென்றால் இது எந்த பொருளின் மீது ஊடுருவினாலும் செயல் விளைவுகளை புரியாமல்(Noninteracting) இருப்பதே.

நியுட்ரினோவின் பிறப்பிடம் விண்மீன் திரள்கள் மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்(சூரியன் உட்பட).அதன் கதிரியக்கத்தில்  இருந்து இன்னும் பொருந்த சொல்லலாம்.அங்கு இருந்து எண்ணிக்கை இல்லா ஒளி ஆண்டுகள் பயணித்து இந்த பிரபஞ்சம் முழுதும் இந்த நியுட்ரினோக்கள் பரவி உள்ளன.நியுட்ரினோவின் மிக பெரிய பலம் அதன் செயல் விளைவு புரியா தன்மை(Noninteracting).இதனால் காந்தப்புலத்தாலோ மற்ற ஆற்றல்களாலோ சற்றும் தன் பாதையில் இருந்து விலகாது அதன் போக்கில் பயணித்து கொண்டே உள்ளது.நீங்கள் கட்டுரையை படித்து கொண்டிருக்கும் இந்த நொடியில் கோடிக்கணக்கான நியுட்ரினோக்கள் உங்களை கடந்து சென்று இருக்கும்.

இப்படி எங்கும் நிறைந்து இருக்கும் நியுட்ரினோக்களை ஆய்வு செய்வதில் தான் உள்ளது அனைத்து சிக்கல்களும்.வழக்கமான ஆய்வுகூடங்களை கொண்டு அல்லாமல் பூமியின் மிக ஆழத்தில் ஆய்வு கூடங்கள் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

நியுட்ரினோவால் விளையும் பயன்கள்

  •        அனைத்து  கதிரியக்கங்களில் இருந்தும் நியுட்ரினோக்கள் தோன்றுகின்றன.சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம்(International atomic energy agency)  நியுட்ரினோ காணிகளை(Neutrino Detector) கொண்டு எந்த நாடுகள் அணு ஆயுதங்களை தயாரிக்கிறதென்பதை அறிய இயலும்.
  •      நியுட்ரினோ பற்றிய ஆய்வுகள் தொடரும் நிலையில் பிரபஞ்சத்தை பற்றியும் நட்சித்திரங்களின் வயது மற்றும் தூரத்தையும் தெரிந்து கொள்ள வழிவகுக்கும்.
  •      நியுட்ரினோ இடையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் ஒளியின் வேகத்தில் ஊடுருவி செல்வதால் இதை தொலை தொடர்பிற்கு பயன்படுத்தும் நிலையில் மலைக்க வைக்கும் முடிவுகளை தரவல்ல ஆற்றலை கொண்டது.

நியுட்ரினோ ஆய்வுக்கூடங்கள்

  • நியுட்ரினோ ஆய்வுக்கூடம்,அண்டார்டிகா(Icecube Neutrino Observatory,Antartica)
  • நியுட்ரினோ ஆய்வுக்கூடம்,ரஷ்யா (Baksan Neutrino Observatory (BNO),Russia)
  • நியுட்ரினோ ஆய்வுக்கூடம்,சீனா (Jiangmen Underground Neutrino Observatory,China)
  • நியுட்ரினோ ஆய்வுக்கூடம்,ஜப்பான் (Kamioka Observatory,Japan)

Under Construction

  • நியுட்ரினோ ஆய்வுக்கூடம்,தேனி,இந்தியா (Neutrino Observatory,India)

Neutrino Observatory

இந்த கட்டுரை பற்றிய உங்கள் கருதுக்குழாய் மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்.

மேலும் படியுங்கள்: சோஃபியா- மனித உருக்கொண்ட  எந்திரம் 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *