சுந்தர் பிச்சை

உலகில் பல பெரிய நிறுவனங்கள் உள்ளன.அனால்,அவற்றில் வெகு சில தான் உலகை ஆட்டுவிக்கும் சக்தியை கொண்டுள்ளன.கூகுள்,ஆப்பிள்,முகநூல்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் நீங்கா இடத்தை பெற்றுள்ளது.மாற்றத்திற்கும்,புதுமைக்கும் இணையத்தை கட்டி ஆள்வதற்கும் பெயர்போன கூகுள் நிறுவனத்தை நடத்தும் தலைமை செயல் அதிகாரி எப்படிப்பட்ட ஆற்றல் மிக்கவராக இருப்பார் என யோசித்தது உண்டா?.அதிலும்,அந்த தலைமை செயல் அதிகாரி ஒரு இந்தியராக குறிப்பாக ஒரு தமிழனாக இருந்தால்,அவர் பெயர் சுந்தர் பிச்சை என இருந்தால்…சுந்தர் பிச்சையின் வாழ்க்கையை கூறும் கட்டுரை இது.

சுந்தர் பிச்சை-இளமை வரலாறு

சுந்தர் பிச்சை என அழைக்கப்படும் பிச்சை சுந்தரராஜன் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ஜூலை 12-ம் நாள்,1972-ம் ஆண்டு பிறந்தார்.பின்னர்,சென்னையில் வளர்ந்த இவர் அசோக் நகரில் உள்ள பள்ளியில் தன் கல்வியை முடித்தார்.இவர் தந்தை ரகுநாத பிச்சை சென்னையில்(மெட்ராஸ்) உள்ள பிரித்தானிய நிறுவனத்தில் பொறியியல் வல்லுநகராக பணியாற்றினார்.தாய் லட்சுமி ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்தாளராக பணியாற்றினார்.இவர் உடன் பிறந்தவர் ஒருவர் ஆவார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி

சுந்தர் பிச்சை எளிமையான நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்.தன்னுடைய 12-ம் வயதில் வீட்டில் முதன் முதலாக தொலைபேசி வந்த பிறகு எண்களை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார்.பார்க்கும் ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் எளிதாக நினைவில் வைத்து கொள்ள துவங்கினார்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கரக்பூரில் உள்ள ஐஐடி-யில் பிடெக் metallurgical engineering படிக்கச் சென்றார்.பின்னாளில் .தனக்கு மனைவியாக வரப் போகும் அஞ்சலியை இந்த கல்லூரியில் கண்டார்.அந்த சந்திப்பு முதல் காதல் மலர்ந்து வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

கரக்பூரில் கல்வி முடிந்த பிறகு சுந்தர் பிச்சை ஊக்கத்  தொகையின் உதவியோடு அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்ககத்தில் Material Science and Semiconductor Physics படிக்கச் சென்றார்.அமெரிக்கா செல்ல ஆகும் பயனச் செலவையே மிகுந்த சிரமத்திற்கு பின்னே ஈடுகட்டினார்.

பின்,1997-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்க நினைத்து பிறகு தவிர்த்தார்.

அறிவு அற்றம் காக்கும் கருவி

கூகுள் நிறுவனம்

சிலிக்கான் பள்ளத்தாக்கில்  உள்ள ஒரு நிறுவனத்தில் சிறிது காலம் பணி செய்த பின்னர்,புகழ்பெற்ற வார்ட்டன் வணிகப் பள்ளியில்(Wharton school Of Business) முதுகலை வணிகவியல் படித்தார்.அதன் பின்னர்,2002-ம் ஆண்டு Mckinsey & நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.இந்த பின்னர்  தான் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றலாம் என்று முடிவெடுத்தார்.

2004-ம் ஆண்டு ஏப்ரல்-1ம் நாள் கூகுளில் பணிக்கு சேர்ந்தார்.இதே,ஏப்ரல் 1-ல் தான் கூகுள் நிறுவனம் G-mail சேவையை துவங்கியது.கூகுள் டூல்பார்(Toolbar) வடிவமைக்கும் குழுவில் மிக முக்கிய பங்காற்றினார்.அதை தொடர்ந்து கூகுளிற்கென தனி இணைய உலாவி(Browser) உருவாக்க வேண்டுமென அப்போதைய தலைமை செயல் அதிகாரியான எரிக் ஸ்மித்-யிடம் வலியுறுத்தினார்.ஆனால்,எரிக் இப்போதைக்கு தேவையற்றது எனவும் மிகுந்த செலவு பிடிக்கும் எனவும் அதை நிராகரித்தார்.

கூகுள் இணைய உலாவி(Google Chrome)

சில காலம் கழித்து கூகுளின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின்-யிடம் இணைய உலாவி பற்றி எடுத்துரைத்து வடிவமைப்பதற்கு ஒப்புதல் வாங்கினார்.இதன் பின்,சுந்தர் பிச்சையின் புகழ் உலகம் முழுதும் பரவியது.நாம் இன்று பரவலாக பயன்படுத்தும் கூகுள் க்ரோம்(Google Chrome)  இப்படி உருவானது

தான்.மேலும்,சுந்தர் பிச்சையை பற்றி நன்கு அறிந்து கொண்ட கூகுள் நிறுவனம் அவரை தயாரிப்பு பிரிவின் துணை-தலைவராக நியமித்தது.

2008 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் சுந்தர் பிச்சை பல்வேறு பதவி உயர்வுகளை பெற்று கூகுளின் முக்கியமான பணியாளராக கருதப்பட்டார்.2011-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் சுந்தர் பிச்சையை தம் நிறுவனத்தில் பனி செய்ய அழைத்தது.மேலும்,பன்மடங்கு வருவாய் தருவதாகவும் கூறியும் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் இருக்க விரும்பினார்.

2013-ம் ஆண்டு ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தை(Android Operating System) உருவாக்கியவரான ஆண்டி ரூபின்(Andy Rubin) கூகுளில் இருந்து விலகினார்.இதை தொடர்ந்து ஆண்ட்ராய்ட் தளத்தின் அனைத்து பொறுப்புகளும் சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது.2013-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் சுந்தர் பிச்சையை தம் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக்க விரும்பியது.ஆனாள்,விழித்து கொண்ட கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சை கூகுளை விட்டு நீங்காதவாறு வருவாயை பன்மடங்கு ஏற்றியது.2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் நாள் கூகுள் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்த பின்,சுந்தர் பிச்சையை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

சுந்தர் பிச்சை 6,50,000 டாலர்கள் சம்பளமாகவும் மேலும் பல லட்சம் டாலர்களுக்கு ஈடான கூகுள் நிறுவனத்தின் பங்குகளும் வருவாயாக பெறுகிறார்(as of dec 31,2016).

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்.மேலும் எலன் மசுக் பற்றி படியுங்கள்.

 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Skip to toolbar