ஸ்டீபன் ஹாவ்கிங்

பிரித்தானிய அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாவ்கிங் இயற்பியல் கோட்பாட்டாளர்,விண்வெளி ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர்.இந்த உலகின் உயரிய அறிவியல் அறிஞர்களுள் ஒருவராக கருதப்படும் ஸ்டீபன் ஹாவ்கிங் இந்த பிரபஞ்சம் உருவானது பற்றியும்,அதன் விரிவாக்கம் பற்றியும்,பிக் பாங் கோட்பாடு பற்றியும் மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு உள்ளார்.ஐன்ஸ்டீனிற்கு அடுத்த நிலையில் பெரிதும் போற்ற படும் ஒரு நபர் ஆவார்.

ஸ்டீபன் ஹாவ்கிங்-வாழ்க்கை 

பிரித்தானியாவில் பிறந்த அண்டவியல் ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாவ்கிங் இங்கிலாந்தில் ஜனவரி 8-ம் நாள்,1942-ல் பிறந்தார்.கலிலியோ இறந்து  சரியாக 300 ஆண்டுகள் கழித்து இவர் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்தில் உள்ள உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார்.அதன் பின்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியல்(Cosmology) பயின்றார். இந்த சமயத்தில் தான் பிரபஞ்சம் பற்றி தன் ஆராய்ச்சிகளை அவர் துவங்கினார்.

1963-ம் ஆண்டு அவரின் பிறந்த நாளுக்கு  சிறிது நாட்கள் முன்பு ஸ்டீபன் மோட்டார் நியூரான்  நோயால்(Motor Neuron Disease) தாக்கப்பட்டார்.இதனால் இரண்டு வருடங்களுக்குள் இவர் இறந்து விடுவார் என மருத்துவர்கள் கூறினார்.ஆனால்,அனைத்து தடைகளையும் மீறி தன்னுடைய முனைவர் பட்டத்தை பெற்றார்.வருடங்கள் நகர நகர நோயால் இவரின் உடல் பாகங்கள் செயலற்று போக துவங்கியது.

1965-ல் ஸ்டீபன் ஹாவ்கிங் ஜென் வைல்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதி பிரியும் முன் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள்.

அறிவு செய்யும் ஆச்சர்யங்கள் 

ஹாவ்கிங் கேம்பிரிட்ஜ் பலக்லைக்கழகத்திலே தொடர்ந்து ஆராய்ச்சியாளராக இருந்தார்.இவர் 1974-ல் உலக புகழ்பெற்ற ராயல் சொசைட்டி-யில் (Royal Society) சேர்ந்தார்.இது உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான குழுவாகும்.மேலும்,1979-ல் கேம்பிரிட்ஜ் பலக்லைக்கழகத்திலே விரிவுரையாளராகவும் பணி செய்தார்.

மோட்டார் நியூரான் நோயால் ஸ்டீபன் ஹாவ்கிங்கின் உடல் பாகங்கள் முழுவது செயலற்று போனது.இவரின் வாய் அசைவுகளும் செயலற்று போனதால் இவர் பேசுவது சாத்தியம் இல்லாமல் போனது.பின்,1985 சமையத்தில் வாயின் அசைவுகளை கொண்டு பேச்சை உருவாகும் சாதனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்ககத்திலே உருவாக்கப்பட்டது.அந்த சாதனத்தின் நிரல்(Program) மற்றும் மின்னணு குரல்(Electronic Voice) கொண்டே அவர் அனைவரிடமும் உரையாட துவங்கினார்.

அடுத்த காலம் முழுவதும் இந்த பிரபஞ்சம் உருவானது பற்றியும்,வேற்று கிரகங்கள் பற்றியும்,பிக்பாங் மற்றும் கோட்பாடுகள் பற்றியும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.ஐன்ஸ்டீன் கோட்பாடுகள் பற்றியும் கருந்துளைகள்(Black holes) பற்றியும் விரிவான விளக்கங்களை தந்தார்.இந்த பிரபஞ்சம் எல்லை இல்லாதது என்றும் முடிவே அற்ற தூரத்திற்கு விரிவடைந்து கொண்டு செல்கிறது என்றும் கூறினார்.

ஸ்டீபன் ஹாவ்கிங் எழுதிய நூல்கள்  

ஸ்டீபன் ஹாவ்கிங் மிக சிறந்த எழுத்தாளராக கருதப்பட்டார்.இவர் எழுதிய A Brief History of Time  என்னும் நூல் உலகின் மிக பிரபலமான நூல்களுள் ஒன்றானது.இந்த நூலில்,ஹாவ்கிங் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக இந்த பிரபஞ்சதின் பிறப்பு மற்றும் இறப்பினை பற்றி கூறியுள்ளார்.இதை தொடர்ந்து The Universe In a nutshell,The Grand Design என்று மேலும் பல நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் ஸ்டீபன்  இப்படி கூறியுள்ளார்,

 என் வாழ்க்கை  முழுவதும்,இந்த மனித இனத்தை நோக்கி கேட்கப்படும் சவாலான கேள்விகளை கண்டு ரசித்திருக்கிறேன் மேலும்,அந்த கேள்விகளுக்கு என்னால் முடிந்த வரை அறிவியல் துணை கொண்டு பதில் அளிக்க முயற்சி செய்துள்ளேன்.என்னை போலவே நீங்களும் வானில் நட்சத்திரங்களை பார்த்து நீங்கள் பார்ப்பதை புரிந்துகொள்ள துவங்கிவிட்டீர்கள் என்றால்,நீங்களும் இந்த பிரபஞ்சம் எப்படி துவங்கியது என்று நினைக்க துவங்கிவிட்டீர்கள்”

ஸ்டீபன் ஹாவ்கிங் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி

இந்த பிரபஞ்சத்தில் ஒரு நாள் பயணம் செய்வேன் 

ஸ்டீபன் ஹாவ்கிங் அடிக்கடி சொல்லும் ஒன்று”அண்டார்டிகா முதல் பல இடங்களுக்கு நான் பயணித்து விட்டேன்.அனால்.பூமிக்கு வெளியே சென்று இந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு நாள் பயணம் செய்வேன்.அவர் சொன்னவற்றை நாம் இப்படி தான் எடுத்துக்கொள்ள முடியும்.ஸ்டீபன் ஹாவ்கிங் மார்ச் 14-ம் நாள்,2018-ம் ஆண்டு தம் 76-ம் வயதில்  மறைவுற்றார்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால்  மறவாமல் பகிரவும்.

மேலும் படியுங்கள் : சுந்தர் பிச்சை-வாழ்க்கை வரலாறு 

தமிழ்

Student and a blogger.Contact him at tamil@thescienceway.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: