லேசர் கொண்டு மாற்றம் புரிந்தவர்கள்
இயற்பியல் - நோபல் பரிசு 2018

லேசர் கொண்டு மாற்றம் புரிந்தவர்கள்

Spread the love

        2018-ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு அக்டோபர் 2-ம் திகதி அறிவிக்கப்பட்டது. லேசர் இயற்பியலில் செய்த அரும்பெரும் பணிக்காக டோனா ஸ்ட்ரிக்க்லண்ட் ( Donna Strickland ), ஜெரார்ட் மௌரௌ ( Gerard Mourou ) மற்றும் ஆர்தர் அஷ்கின் ( Arthur Ashkin ) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற இந்த நோபல் பரிசின் ஒரு பாதியை ஆர்தரும் மற்றொரு பாதியை டோனா மற்றும் ஜெரார்ட் பகிர்ந்துக் கொள்வார்கள். இயற்பியல் மூலம் இந்த மூன்று பெரும் மனித நலத்திற்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர்.

இயற்பியல் – நுட்பம் 

             ஆர்தர் அஷ்கின் நிகரில்லாத பணியைச் செய்துள்ளார். இவர் உருவாக்கிய ” ஒளிசார் பற்றிடுக்கிப்பொறி “-ன்  ( Optical tweezers )  துணைக்கொண்டு மிக நுண்ணிய பொருட்களான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை இறுக்கப்பிடிக்கவும், நகர்த்தவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

           96 வயதானவரான ஆர்தர் நோபல் பரிசை பெற்றவர்களிலேயே மிக வயதானவராவார். 1960-ம் ஆண்டுகாலத்தில் லேசர் கண்டுபிடிப்பு நிகழ்ந்த உடனேயே இவர் ஆராய்ச்சியும் துவங்கிவிட்டது.

       ஆர்தர் நிகழ்த்திய கண்டுபிடிப்பைப் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் கூறும் பொழுது ” ஆர்தரின் இந்த கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட  இரத்த செல்களிடம் இருந்து நலமுடன் உள்ள இரத்த செல்களை பிரிப்பது முதல் பல்வேறு இடங்களில் இவரின் கண்டுபிடிப்பு தனது தாக்கத்தை தந்துள்ளது.

மேலும் படிக்க : மருத்துவம் – நோபல் பரிசு 2018

கடந்த 55 ஆண்டுகளில் இந்த விருதை பெரும் முதல் பெண் 

              கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டோனா கடந்த 55 ஆண்டுகளில் இந்த விருதை பெரும் முதல் பெண்மணி ஆவார். டோனா மற்றொரு ஆராய்ச்சியாளாரான ஜெரார்டுடன் இந்த விருதின் ஒரு பாதியை பகிருந்துக்கொள்வார்.

              டோனா மற்றும் ஜெரார்ட் இருவரும் இதுவரையில் உருவாக்கப்படாத மிக குறுகிய அதே சமயம் மிகுந்த செறிவுக்கொண்ட ஒளிக்கற்றைகளை ( Short and Intense Beam of Light ) உருவாக்கியுள்ளனர். இவர்களின் இந்த உருவாக்கம் கண் அறுவைசிகிச்சை முதல் பொருள் அறிவியல் ( Material Science ) என பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இயற்பியல் நோபல் பரிசு வெற்றியாளர்
படம் : Getty Images 

                இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னரே டோன்னாவிற்கு விக்கிப்பீடியாவில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் பெண்களின் பங்கு மிக முக்கியம் எனவும், ஆனால் நாம் ஏன் இன்னும் அதை உணராமல் உள்ளோம் எனவும் பலர் கேள்வி எழுப்பினர்.

மேலும் படிக்க : மனித பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது ?

             இதை தொடர்ந்து நோபல் தேர்வு குழுவின் ( Royal Swedish academy of Sciences ) செயல்தலைவரான கோரன் கூறுகையில் எங்கள் கழகம் இந்த விருதுகளுக்கு பெண் ஆராய்ச்சியாளர்களை முன்மொழியப்படுவதை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். மேலும், இந்த நோபல் பரிசு மனித இனத்திற்கு பெரும் பங்காற்றும் ஆராய்ச்சிகளுக்கு, கண்டுபிடிப்புகளுக்குமே தரப்படுவதாகவும் கூறினார்.

          ஒட்டுமொத்த இயற்பியல் நோபல் பரிசு வரலாற்றில் மொத்தம் மூன்றே பெண்கள் இயற்பியல் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதும் அதில் டோன்னாவும் ஒருவராவார் என்பதும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகும்.

Close Menu
%d bloggers like this: