செயற்கை நுண்ணறிவு கற்றுத்தரும் 10 சிறந்த இணைய படிப்புகள்

செயற்கை நுண்ணறிவு கற்றுத்தரும் 10 சிறந்த இணைய படிப்புகள்

Spread the love

இன்னும் சிறிது ஆண்டுகளில் இணையம் முதல் கைபேசி வரை, அலுவலகம் முதல் வீடு வரை செயற்கை நுண்ணறிவின் ( Artificial Intelligence ) பங்களிப்பு வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செயற்கை நுண்ணறிவால் பல வேலைவாய்ப்புகள் இழப்பும் ஏற்படும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய அறிவைக் கொண்டவர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். இப்படி நீங்களும் செயற்கை நுண்ணறிவின் மீது ஆர்வம் கொண்டவர் என்றால் அதை கற்றுக்கொள்ளவும் உங்களிடம் ஆர்வம் உள்ளதென்றால் உங்களுக்கும், நீங்கள் கற்றுக்கொள்வதற்கும் இடையில் எதுவும் நிற்கப் போவதில்லை. இணையத்தில் உள்ள இணைய படிப்புகளை கற்றுக்கொண்டு எளிதாக செயற்கை நுண்ணறிவு துறையில் நீங்கள் புகுந்து விடலாம். அப்படி இணையத்தில் உள்ள சிறந்த 10 இணைய படிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன ( இவை அனைத்தும் கோரா மற்றும் ரெட்டிட் போன்ற தளங்களின் தரவுகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது ).

இணைய படிப்புகள் 10

  1. Udacity – Intro to Machine Learning

செயற்கை நுண்ணறிவைப் பற்றிய கல்வியை துவங்குவதற்கு இதுவே சிறந்த இடம் ஆகும். செயற்கை நுண்ணறிவின் முக்கிய பகுதியான Machine Learning ( இயந்திர கற்றல் ) பற்றி 10-11 வார இடைவெளியில் இங்கு கற்று தரப் படுகிறது.

இணைப்பு : Udacity – Intro to machine learning 

இணைய படிப்புகள்

    2. Google Deep learning

Python நிரலாக்க மொழியைப் பற்றியும் Github பற்றியும் அடிப்படையை தெரிந்து வைத்திருப்பவர்கள் இந்த இணைய படிப்பை படிக்கலாம். Udacity-இன் Intro to machine learning படிப்பின் நீட்சியே இந்த படிப்பு என்று கூறலாம்.இந்த படிப்பை கூகுள் இலவசமாகவே Udacity வழியே வழங்குகிறது.

இணைப்பு : Google deep learning

   3. Machine Learning by Andrew Ng

செயற்கை நுண்ணறிவு துறையில் மிக முக்கியமான ஆய்வாளரான Andrew Ng-யால் நேரடியாக இணையத்தின் ஊடே கற்பிக்கப்படும் இந்த படிப்பானது 11-12 வார காலம் கொண்டதாகும். இந்த படிப்பு பல மாணவர்கள் இடையே நல்மதிப்பெண்ணை பெற்றுள்ளது.

இணைப்பு : Machine Learning by Andrew Ng 

இணைய படிப்புகள்

   4. செயற்கை நுண்ணறிவு – Stanford University

Stanford University வழங்கும் இந்த படிப்பானது இயந்திர கற்றல், குரல் மற்றும் முக அடையாளங் காணுதல் மற்றும் பல சிக்கலான விடயங்கள், தீர்வுகள் என அனைத்தைப் பற்றியும் கற்றுத் தருகிறது.

இணைப்பு : செயற்கை நுண்ணறிவு – Stanford University 

    5. Edx course

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசியர்களால் பயிற்றுவிக்கப் படும் இந்த பாதிப்பானது இயந்திர கற்றல் முதல்  கணக்கீடுகள் என அனைத்தைப் பற்றியும் கற்று தருகிறது. இது 10-11 வாரம் காலம் எடுக்கக் கூடிய ஒரு இணைய படிப்பு ஆகும்.

இணைப்பு : Edx course on machine learning 

   6. Udacity’s Artificial intelligence for Robotics

Udacity ஜார்ஜியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து  வழங்கும் இந்த படிப்பு செயற்கை நுண்ணறிவை இயந்திரங்களுடன் தொடர்பு படுத்தி நடத்தப்படுகிறது. Python நிரலாக்கம், கணிதம், Deep learning எனப் பல்வேறு கருத்தாக்கங்களை இந்த கல்வி விரிவாக விளக்குகிறது.

இணைப்பு : Udacity’s artificial intelligence for robotics 

   7.Factual Machine learning

carnegie mellon university-இன் பேராசிரியரால் Youtube-இல் நடத்தப்படும் இந்த படிப்பானது முது நிலை மாணவர்களுக்கு தரப்படுகிறது.

இணைப்பு : Factual machine learning 

   8. Coursera’s neural networks for Machine learning

Coursera தளத்தின் உதவியுடன் தரப்படும் இந்த படிப்பானது  16 வார காலம் கொண்டதாகும். குரல் மற்றும் முக அடையாளங் காணுதல் முதல் மேன்மையான படிப்பாகும்.

இணைப்பு : Neural network on machine learning 

   9. Edx AI

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் வழங்கப்படும் 12 வார கால படிப்பான இது செயற்கை நுண்ணறிவைப் பற்றி விரிவாக அலசுகிறது.

இணைப்பு : Edx AI 

  10. Theory

செயற்கை நுண்ணறிவைப் பற்றியான அடிப்படைகளை கற்றுக் கொள்ள உதவும் படிப்பு இது.

இணைப்பு : Basics 

தமிழ்

Student and a blogger. Contact him at [email protected]
Close Menu
%d bloggers like this: