மருத்துவம் நோபல் பரிசு வெற்றியாளர்கள் – 2018
நோபல் பரிசு வெற்றியாளர்கள். படம் : The Nobel Commitee

மருத்துவம் நோபல் பரிசு வெற்றியாளர்கள் – 2018

Spread the love

சுவிற்சர்லாந்தை சேர்ந்த நோபல்  குழு வருடா வருடம் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.  அக்டோபர் 1-திகதி நோபல் குழு இணைந்து மருத்துவத்திற்கான நோபல் பரிசை அறிவித்தது. இதையடுத்து ஜேம்ஸ் பி.அலிசன் (James P.Allison) மற்றும் டசுக்கு ஹோஞ்சோ (Tasuku Honjo )  என்னும்  இரு ஆராய்ச்சியாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசை நோபல் குழு அறிவித்தது. புற்றுநோய்த்தடுப்பாற்றல் சிகிச்சையில் இவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக இந்த பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு 

          சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் பெரும் பணக்காரரான ஆல்பிரெட் நோபல் ( Alfred Nobel ) நினைவாக  வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல், மருத்துவம் மற்றும் பொருளாதாரம் ( 1968-ம்  ஆண்டு முதல் வழங்கப்படுகிறது) ஆகிய துறைகளில் ஒப்பற்ற பனி செய்ததற்காக தனி மனிதர்களுக்கு வழங்கப்பெறுகிறது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த நோபல் பரிசை பெரும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பட்டயமும் வழங்கப்படும். 1901-ம் ஆண்டு துவங்கி 2017-ம் ஆண்டு வரையில் 585 முறை 923 பேருக்கு (நிறுவனங்கள் உட்பட) நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு

மருத்துவத்திற்கான நோபல் 

               2018 ஆண்டுக்கான நோபல் பரிசை அறிவிக்கும் பொருட்டு நோபல் குழு பல்வேறு ஆளுமைகளின் பெயர்களை அலசி வருகிறது. இதை மருத்துவ ஆராய்ச்சி  துறையில் சிறந்த ஆளுமைகளாக இருக்கும் அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.அலிசன்  மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  டசுக்கு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான நோபலை பகிர்ந்து அளித்துள்ளது. இவர்கள் சுமார் 1 மில்லியன் டாலர்களை பகிர்ந்துகொள்வார்கள்.

           

Close Menu
%d bloggers like this: