பெரு வெடிப்புக் கோட்பாடு- பிரபஞ்சத்தின் கதை

பெரு வெடிப்புக் கோட்பாடு- பிரபஞ்சத்தின் கதை

Spread the love

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதற்கு உள்ள ஒரு பதில் ” பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory) ” . இதைப்பற்றி பல ஆய்வுகள் நம் ஆராய்ச்சியாளர்கள் இடையே நடந்து இருந்தாலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை பற்றி இன்னும் முழுமையாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், பெரு வெடிப்புக் கோட்பாட்டிற்குப் பின் என்ன நடந்திருக்கும், அதில் இருந்து துவங்கி உயிர்கள் உருவானது வரை பல செயல்கள் இந்த பிரபஞ்சத்தில் எப்படி அரங்கேறியது என்பதை பற்றிய தெரிய வந்துள்ளது.

சுமார் 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிரபஞ்சம் மிக இளமையானதாக, எதுவும் அற்ற நிலையில் இருந்து உருவானது  . அதாவது பெரு வெடிப்பு அரங்கேறியது 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். இந்த பெரு வெடிப்பிலிருந்து இன்று உள்ள நட்சித்திரங்கள்  மற்றும் கோள்கள் எப்படி பிறந்தது என்பதை அறிவதற்கு முன் பெரு வெடிப்பிற்கு முன் இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை பெரு வெடிப்புக் கோட்பாட்டின் மூலம்  அறிவோம். ஏன் என்றால் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.

பெரு வெடிப்பிற்கு முன் ( Before Big Bang )

பெரு வெடிப்பிற்கு முன், இந்த பிரபஞ்சம் எப்படி காட்சி அளித்தது என்று இன்னும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதற்கு காரணம் உள்ளது. நாம் இப்பொழுது தான் நமது அண்டை  கோள்களான செவ்வாய், வியாழனுக்கு செயற்கை கோள்களை அனுப்ப துவங்கி உள்ளோம். நாம் சிறிது வருடங்களாக தான் தொலைநோக்கிகளைக் கொண்டு அருகில் உள்ள நட்சித்திரக் குடும்பங்களை ஆராய்ந்து வருகிறோம். இப்படி விண்வெளி சார்ந்த அறிவியலில் நாம் இன்னமும் முதல் கட்டத்தில் தான் உள்ளோம். இந்த நிலை இருக்கையில் நம் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட அளவைக் கொண்ட இந்த பிரபஞ்சத்தை பற்றியும் பெரு வெடிப்புக் கோட்பாடு பற்றியும்  முழுமையாக அறிந்துக் கொள்ள தான் எப்படி முடியும் ?

ஆனால், அதே சமயம் இப்படி தான் இந்த பிரபஞ்சம் துவங்கி இருக்க வேண்டும் என்பதற்கான யுகங்கள் ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளது. அவற்றில், முதலாவது ” Inflationary theory “. Inflationary theory-யின் கூற்று படி இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு சிறிய மையப் புள்ளியாக தான் துவக்கத்தில் இருந்தது. அது சிதறி திசைகளிலும் வேகமாக பரவியதை தான் நாம் இன்று பிரபஞ்சம் என்று அழைக்கிறோம்.

அடுத்தது ” Cyclical theory “. Cyclical theory-யின் கூற்றுப்படி முன்னமே வேறு ஒரு பிரபஞ்சம் இருந்து, அது உருக்குலைந்து பின் மீண்டும் உருவானதே இந்த புதிய பிரபஞ்சம். இந்த இரண்டுமே மிக முக்கியமான கொள்கைகளாக மதிக்க படுகின்றன. இருந்தாலும் Inflationary theory-ஐ தான் பரவலாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். பெரு வெடிப்புக் கோட்பாடும் Inflationary theory-யின் உதவியின் கொண்டே கட்டமைக்கப்பட்டது.

பெரு வெடிப்புக் கோட்பாடு

பெரு வெடிப்புக்  கோட்பாட்டின் படி  ஒரு சிறிய மைய புள்ளியில் இருந்து இந்த பிரபஞ்சம் உருவாக துவங்கியது. மேற்சொன்ன மையப் புள்ளி சிதற துவங்கிய பொழுது அதில் இருந்து தூய்மையான ஆற்றல் ( Clean energy ) வெளிப்பட்டது. அப்படி வெளியான தூய்மையான ஆற்றல் ஒருமுகபடுத்தப்பட்டு இணை அணுவியல் துகள்கள் ( Sub-atomic particles ) உருவாகின. மேலும் பெரு வெடிப்பில் இருந்து பெரும்பாலும் ஹைட்ரோஜென் ( Hydrogen), ஹீலியம் ( Helium ) மற்றும் குறைந்த அளவிலான லித்தியம்( Lithium ) மட்டுமே உற்பத்தி ஆகின. இப்படி தான் தனிம அட்டவணையில் ( Periodic table ) உள்ள முதல் மூன்று இடங்கள் நிரப்பபட்டன.  நம் பூமியில் உள்ள தொண்ணூறு சொச்சம் கனிமங்கள் இல்லாமல், பிரபஞ்சத்தின் துவக்கத்தில்  வேதியியல் மிக எளிமையாக காணப்பட்டது.

இதன் பின், வாயு மேகங்கள் உருவாகி, வெப்பமடைந்து Nuclear Fusion நடந்தது. இந்த பிரபஞ்சம் தான் உருவானதில் இருந்து தன் முதல் ஒளியை Nuclear Fusion-னின் உதவிக்கொண்டு தான்  காண நேர்ந்தது.

நட்சத்திரங்களின்  வருகை

பெரு வெடிப்புக் கோட்பாடு துவங்கி ஒரு பில்லியன் ஆண்டுகள் கழித்து, இந்த பிரபஞ்சத்தில் பிறந்த நாள் கேக்கில் இருக்கும் மெழுகுவர்த்தியை போல சில நட்சித்திரங்கள் காணப்பட்டன. இப்படி உருவான நட்சத்திரங்களின் மையப் பகுதியில் ( Core ) மிக அதிகமான வெப்பமும், அழுத்தமும் இருந்துக் கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக Nuclear fusion நடந்துகொண்டே இருப்பதால் அதில் இருந்து வெளிவரும் நம் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட சக்தி நட்சத்திரங்களை இடை விடாமல் எரிந்துக் கொண்டே இருக்க செய்தன. எதிர்காலத்தில் உயிர் என்று ஒன்று உருவாக, Nuclear fusion-னின் உதவிக்கொண்டு புதுப்புது கனிமங்கள் உருவாகிக் கொண்டு இருந்தன.

பெரு வெடிப்புக் கோட்பாடு

Nuclear fusion

நட்சத்திரங்களில் நடக்கும் Nuclear fusion-இல் தொடர்ச்சியாக ஹைட்ரோஜென் வினைபடு பொருளாக ( Reactant ) செயல்படுகிறது. ஹைட்ரோஜென் உட்கரு ( Hydrogen Nuclei ) கொண்டுள்ள ஒரு ப்ரோடான் ( Proton ) Nuclear fusion-இல் செலவழிக்கப்பட்டு பின் ஹீலியம் ஹீலியம் உட்கருவாக மாற்றம் பெறுகிறது. இந்த நிகழ்வில் அதிகப்  படியான ஆற்றல் வெளிச்சமாகவும் வெப்பமாகவும் இன்னும் பிற வழிகளில் வெளியாகிறது. ஹைட்ரோஜென் வாயு முற்றிலுமாக எரிவாயுவாக செலவழிக்கப்பட்ட பின்னர் இப்பொழுது பெரும்பாலும் ஹீலியம் மயமாக காணப்படுகிறது.

இப்பொழுது நட்சத்திரத்தின் மையப் பகுதி சிறிது சிறிதாக குறுக துவங்குகிறது. முன்னர் இருந்ததை விட இப்பொழுது பன்மடங்கு வெப்பமும், அழுத்தமும் அதனுள் அதிகரிக்கிறது. ஆனால, அதற்கு எதிராக விரிவடைந்து முன்னர் இருந்ததைவிட அதில் வெப்பம் குறைய துவங்குகிறது. நட்சத்திரம் உருவானதில் இருந்து மேற்சொன்ன நிலைக்கு வருவதற்கே சில பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஹீலியம் இப்பொழுது Nuclear fusion-இல்  வினைபடு பொருளாக செயல்படுகிறது. இந்த Nuclear fusion-இல் மூன்று ஹீலியம் உட்கரு ( Also called as Alpha Particle ) இணைந்து கார்பனை உருவாக்குகிறது ( இந்த வினைக்கு Triple Alpha process என்று பெயர் ). மேற்சொன்ன கார்பனுடன் மேலும் ஒரு ஹீலியம் உட்கரு இணையும்பொழுது பிராணவாயுவாக ( Oxygen ) மாற்றம் பெறுகிறது.

ஹீலியம் Nuclear fusion-இல் வினைபடு பொருளாக எரிந்துக் கொண்டு இருக்க நட்சத்திரத்தின் மையப் பகுதி மேலும் குறுகிக் கொண்டே செல்கிறது. Nuclear fusion-இல் இருந்து கார்பன்,ஆக்சிஜென், சிலிகான், சல்பர் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் உருவாகின்றன. இப்படி காலபோக்கில் ஒரு வயதான நட்சத்திரத்தின் வெப்பம் சுமார் 100 மில்லியன்  டிகிரி அளவிற்கு இருக்கும்

நட்சத்திரத்தின் மையப்பகுதியில் வெப்பமும்,  அழுத்தமும் ஒரு எல்லையை கடக்கும் பொழுது நட்சத்திரம் மொத்தமும் வெடித்துச் சிதறுகிறது ( Colossal explosion ). இப்படி வெடித்துச் சிதறும் நட்சத்திரத்திற்கு Super nova என்றுப் பெயர். வெடித்துச் சிதறும் அந்த தருணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களை விட பிரகாசமாக ஒளியை வீசும் அல்லது Super nova-வின் ஒளியின் முன் பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து நட்சத்திரங்களின் ஒளியும் மழுங்கியதாக காணப்படும் என்று கூறலாம்.

பெரு வெடிப்புக் கோட்பாடு

இந்த வெடிப்பின் பொழுது சிதறடிக்கப் படும் நட்சத்திரங்களின் பகுதிகள் சில வெப்பம் தணிந்து கோள்களாக மாறும். அப்படி அந்த கோள்களில் உள்ள ஹைட்ரோஜெனும் ஆக்சிஜெனும் சேரும்பொழுது நீராக உருவாகிறது.நீர் இருக்கும் இடத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் ஆகின்றன. அப்படி நீர் இருந்து உயிர்கள் உருவான ஒரு இடம் தான் நம் பூமி.

மேலும், தொடர்ந்து படியுங்கள் மற்றும் பகிருங்கள்.

 

 

தமிழ்

Student and a blogger. Contact him at [email protected]
Close Menu
%d bloggers like this: