மனித பரிணாம வளர்ச்சி
Human evolution

மனித பரிணாம வளர்ச்சி

Spread the love

மனித பரிணாம வளர்ச்சி (படி வளர்ச்சி கொள்கை என்றும் அழைக்கப்படும்,மேலும் ஈழத்தில் கூர்ப்பு கொள்கை என அழைக்கப்படும் )  இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் புதிராகவும் வாட்டி வதைக்கும் ஒரு சொல்லாகவும் உள்ளது.இங்கு வாட்டி வதைக்கும் என்ற சொல் வந்ததற்கு காரணம் இன்று வரை மனித பரிணாம வளர்ச்சியை முழுதும் புரிந்துக் கொள்ள இயலாததே.என்னதான் இன்று பரிணாம வளர்ச்சியை பற்றி நாம் அதிகம் அறிந்திருந்தாலும் அதை முழுதாக அறியவில்லை என்பது தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மெய்.

மனித பரிணாம வளர்ச்சி

மனித பரிணாம வளர்ச்சி சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் துவங்கி இன்று தற்கால மனிதர்களாக நாம் நிற்கிறோம்.குரங்குளில் இருந்து உடலமைப்பு முதல் போக்கு வரை சிறிது சிறிதாக சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு மேம்பட்டு இன்று தொழிநுட்ப உலகில் வாழ்கிறோம்.இவை, அனைத்தும் பரிணாம வளர்ச்சி தான்.பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களோடு நில்லாமல் விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ளவும் உள்வாங்கிக்கொள்ளவும் படிக்கவும் படிமங்கள்(Fossils) உதவி செய்கின்றன.ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு வருடமும் படிமங்களை கொண்டு ஆராய்ந்து பரிணாம வளர்ச்சியை இன்னும் புரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.

பரிணாம வளர்ச்சி என்றால் என்ன ?

குரங்கினம் (Primates) மற்ற பாலூட்டிகளிடம் இருந்து மாறுபடத் துவங்கி  சுமார் 85 மில்லியன் ஆகியுள்ளதென மரபியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பரிணாம வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட உயிர்த்தொகையில்(Population) ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.இங்கு உயிர்த்தொகை என குறிப்பிடப்படுவது யாதெனில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்கள் ஆகும்.இப்படி தொடர் பல்லாயிரம் வருடங்கள் நடந்த தொடர் மாற்றங்களால் மனிதன்(மனிதன்,மனிதக்குரங்குகள்,சிம்பன்சி  அனைத்தும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை)  மற்ற குரங்குகளிடம் இருந்து மாறுபட துவங்கினான்.அவற்றில் முக்கியமானவை இருகால் பழக்கம்(Bipedalism),நீண்ட கருவுருக்காலம்(Long Gestation),மூளையின் அளவில் மாற்றம்,பால் ஈருருமை குறைதல் (Decreased Sexual Dimorphism) ஆகியன.மூலக்கூறு சான்றுகளின் படி மனித குரங்குகள்,சிம்பன்சி மற்றும் கடைசியாக மனிதர்கள் 8-ல் இருந்து 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மூதாதையரிடம் இருந்து மாறுபட துவங்கினர்.மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் 98.4 % அளவிற்கு டிஎன்ஏ-வில் ஒற்றுமை இருப்பதற்கு இதுவே காரணம்.

மனித பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி

இயற்கை  தேர்வு (Natural Selection) :

பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வு என்னும் கோட்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.இயற்கை தேர்வு சார்லஸ் டார்வினால்  (Charles Darwin) “The Origin of species” என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.ஒரு விலங்கை ஒரு சூழ்நிலையில் உயிர் வாழச் செய்யும் சாதகமான அம்சங்களே பின்னாளில் வரும் விலங்குகளில் மரபியல் இயைபாக (Genetic Compostion) தொடர்கிறது. இந்த செயலே ஒரு விலங்கினத்தின் பல தலைமுறைகளை வாழச் செய்கிறது.அந்த மரபியல் இயைபு காலப்போக்கில் வலுவாகி அந்த விலங்கை நீடித்து வாழச் செய்கிறது.

மேலும் பரிணாம வளர்ச்சி என்பது உயிரினங்களோடு நில்லாமல் நிலம்,பூமி என அனைத்திற்கும் பொருந்தும்.Big Bang Theory என்னும் அண்ட வெடிப்பிற்கு பிறகு சிறு நட்சத்திரங்கள், கோள்கள் என உருவாகின. அந்த கோள்களில் ஒன்றான பூமி எரியும் நெருப்பாக இருந்து பின் சிறிது சிறிதாக குளிர துவங்கி பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு பின் உயிர் வாழ தகுதியான கோலாக உருப்பெற்றது.

மேலும் தவறாமல் படியுங்கள் :  பறவைகள் எப்படி திசை அறிந்து பறக்கின்றன?


Suggested blogs : Tamizh vocabulary 

தமிழ்

Student and a blogger. Contact him at [email protected]
Close Menu
%d bloggers like this: