மேகங்கள் மழையை உருவாக்குகின்றன.ஆனால்,அந்த மேகங்கள் எப்படி உருவானது?

Spread the love

நாம் அனைவருமே மழையை ரசித்திருப்போம்.அந்த மழையை தந்தருளும் மேகங்களை கண்டு பல கனாக்கள் கண்டிருப்போம்.நீங்கள் காதலிப்பவராக இருந்தால் ஏதேனும் ஒரு நேரத்தில் மேகங்களை போல மிதக்கும் உணர்வை கொண்டிருக்கலாம்.உங்கள் காதலியுடனோ அல்லது காதலுடனோ மேகங்களில் அமர்ந்து கொண்டு காதலிக்கும் கனவுகள் கூட வந்திருக்கலாம்.சரி,சரி நாம் பேசியதில் இத்தனை மேகங்கள் வருகிறதே.அந்த மேகங்கள் எப்படி வந்தன என நாம் யோசித்ததுண்டா?.இல்லை எனில்,கீழே இருப்பதை தவறாமல் படிக்கவும்.மேகங்கள் எப்படி உருவாகுகின்றன என்பதை பற்றிய பதிவு இது

மேகங்களின் கதை

இந்த புவியில் உள்ள உயிர்களின் ஆதாரம் சூரியன்.சூரியனை மையம் கொண்டே அல்லது ஏதோ ஒரு வகையில் சூரியனின் தொடர்பாலேயே இந்த உலகில் அனைத்தும் இயங்குகிறது.மழையும் மேகங்களும் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன?.சூரியனின் வெப்பம் கொண்டு செடி கொடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன.அதே வெப்பம் கொண்டு தான் நீரும்(கடல் நீர்,ஆறு நீர்,ஏரி நீர் என அனைத்தும்) நீராவி ஆகிறது.ஆனால்,அந்த நீராவி எங்கே செல்கிறது? சில நொடிகள் எடுத்து யோசியுங்கள் பார்க்கலாம்.விடை  நாம் அனைவரும் அறிந்ததே நீர் வெப்பத்தினால் நீராவி ஆகி வானை நோக்கி செல்கிறது.இந்த செயல்முறைக்கு ஆவியாகல்(Evapouration) என்று பெயர்.

வெப்பத்தினால் நீராவி ஆகும் தண்ணீர் உயர் காற்றழுத்த பகுதியான தரையில் இருந்து குறைந்த காற்றழுத்த பகுதியான வானத்திற்கு செல்கிறது(Water vapour travels from High air pressure area which is ground to low pressure area which is sky).மேல் சொன்ன நீராவி மேலே செல்ல செல்ல குளிர்ச்சி அடைகிறது.குறிப்பிட்ட உயரத்திற்கு சென்றபின் நீராவி முற்றிலும் குளிர்ச்சி அடைந்து வளிமண்டத்தில் உள்ள தூசி மற்றும் இதர நுண்ணிய பொருட்களுடன் சேர்ந்து மறுபடியும் நீராக(Condensation) மாற துவங்கும்.ஆனால்,இது வழக்கமான நீர் போல்  இல்லாமல் ஒரு கன மீட்டரில் 100 மில்லியன் மிக  நுண்ணிய நீர் துளிகளாக உறைந்த நிலையில்  இருக்கும்.சுற்றி இருக்கும் அனைத்து நுண்ணிய உறைந்த  நீர் துளிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொள்ளும். இதுவே பெருந்திரளாக நிகழும் பொது பெரும் மேகமாக உருவெடுக்கிறது.ஒரு சாதாரண மேகத்தின் எடை சுமார் 100 யானைகளின் எடைக்கு ஈடாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

மழை பொழிதல்

இப்படி உறைந்த நுண்ணிய நீர் துளிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மேகங்களின் திரள்களை உருவாக்குகிறது.உறைந்த நீர் துளிகள் அனைத்தும் ஒரு கட்டத்திற்கு பின் சிறிய சிறிய துளிகளாக மாறி மீண்டும் பூமிக்கே திரும்புகிறது(Precipitation).இதுவே நாம் மழை என்கிறோம்.இந்த சக்கரம் திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருக்கிறது.மேலும் தண்ணீர் ஆவியாதல்,ஆவியான தண்ணீர் உறைந்து மேகமாக மாறுதல்,உறைந்த நீர் மீண்டும் நீராக மாறி பூமிக்கு வரும் செயல்முறையை குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலைக்கும் உயர்ந்த காற்றழுத்த நிலைக்கும் இடையில் செயல்படும் ஒரு நிகழ்வாக நாம் புரிந்து கொண்டால் அறிவியல் மிக எளிமை ஆகிவிடுகிறது.

மேலும் மேகங்களில் பல வகை உள்ளது,பூமியில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றது போல் மேகங்கள் அதிகமாகவோ குறைவாகவோ உருவாவதும் உண்டு.ஆனால்,இந்த மேகம் உருவாவது மட்டும் நிலையானது ஆகும்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்.

 

மேலும் படிக்க: ஃபால்கான் ஹெவி-ஸ்பெஸ் எக்ஸ்-இன் மற்றுமொரு சாதனை

தமிழ்

Student and a blogger. Contact him at [email protected]
Close Menu
%d bloggers like this: