பரிணாம வளர்ச்சி பெற்றுத்தந்த மூன்று நோபல் பரிசுகள்

பகிருங்கள்

             வேதியியல் நோபல் பரிசை நோபல் தேர்வு குழு ( Swedish Academy of Sciences ) அக்டோபர் 3-ம் திகதி அறிவித்தது. இந்த பரிசின் ஒரு பாதியை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரான்ஸ் ஆர்னோல்டும் மற்றொரு பகுதியை மிஸ்ஸவ்ரி பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் ஸ்மித் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிரிகோரி வின்டரும் பகிர்ந்துக்கொள்வார்கள்.

The Nobel Prize in Chemistry 2018 was divided, one half awarded to Frances H. Arnold “for the directed evolution of enzymes”, the other half jointly to George P. Smith and Sir Gregory P. Winter “for the phage display of peptides and antibodies.”


The Nobel Prize in Chemistry 2018. NobelPrize.org. Nobel Media AB 2018. Fri. 5 Oct 2018. 

              இந்த மூவரில் ஆர்னோல்ட் வேதியியல் நோபல் பரிசு பெற்ற ஐந்தாவது பெண்மணி ஆவார். பரிணாம வளர்ச்சியின் (Evolution) தத்துவங்களைப் பயன்படுத்தி அறிவியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காகப் ஆர்னோல்ட்-க்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு தேர்வு குழு கூறியுள்ளது. இந்த 2018-ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற பெண்களில் ஆர்னோல்ட் இரண்டாவது பெண்மணி ஆவார் ( இதற்கு முன் இயற்பியலில் ஒரு பெண் நோபல் பரிசு பெற்றுள்ளார் )

வேதியியல் - நோபல் பரிசு 2018
வேதியியல் – நோபல் பரிசு 2018

மேலும் படிக்க : இயற்பியல் நோபல் பரிசு வெற்றியாளர்கள் – 2018

வேதியியல் – புதுமை 

           ஆர்னோல்ட் ஆராய்ச்சி  நொதிகள் ( Enzymes ) வழியே இரசாயன வினைகளை ஊக்கப்படுத்தும் புரதம்  ( Protein that Catalyze Chemical Reactions ) பற்றியதாகும். இவர் செய்த ஆராய்ச்சிகள் தொழில்துறை இரசாயனங்கள் ( Industrial Chemicals ) மற்றும் மருந்துத் தொழில்சார் ( Pharmaceuticals ) துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சிக்கான பங்களிப்பை தந்துள்ளது.

மேலும் : ஆர்னோல்ட்டின் ஆராய்ச்சியைப் பற்றி படியுங்கள் 

       ஆர்னோல்டின் ஆராய்ச்சிகள் எத்தகைய முக்கியத்துவம் கொண்டுள்ளதென்றால்  நாம் இல்லத்தில் பயன்படுத்தும் சலவைப்   (Detergent )  பொருள்களில் நொதிகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. மேலும், உயிரி எரிபொருள் (Bio fuel) உருவாக்கும் நொதிகள், புதிய மருந்து பொருள்களை உருவாக்கும் நொதிகள் என அனைத்திலும் இவரின் பங்களிப்பு உள்ளது.

        இவர் வேதியியலுக்கு செய்த பங்களிப்பு மிகப்பெரியது என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பரிணாம வளர்ச்சியின் புரட்சி 

          ஸ்மித் மேம்படுத்திய முறையால் ஒரு வைரஸ் கொண்டு பாக்டீரியாவை தொற்றச்செய்து (Virus that Infects Bacteria ) பாக்டீரியா மூலம் ஒரு புதிய புரதத்தை உருவாக்க இயலும்.

மேலும் : மருத்துவம் – நோபல் பரிசு 2018 

       வின்டர் உருவாக்கிய முறைக்கு ‘ Same Phage Display Technique ‘ என்று பெயர். இந்த முறையைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட மருந்துகளை உருவாக்க முடியும்.

       வின்டரின் ஆராய்ச்சியால் உருவான ஒரு மருந்துப்பொருள் “Humira”. Rheumatoid Arthritis எனப்படும் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இந்த மருந்துப்பொருள் இதுவரை உலகம் முழுதும் சுமார் 18 பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டியுள்ளது.

மேலும் படிக்க : மனித பரிணாம வளர்ச்சி 

You may also like...

%d bloggers like this: