மனித பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது ?

மனித பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது ?

பகிருங்கள்

                மனிதர்களிலும் ஏனைய பாலுட்டிகளைப் (Mammals) போலவே பாலினம் வேறுபடுகிறது. இது மரபு வழியாக நிகழும் (Genetic Inheritance ) ஒரு செயல் ஆகும். பொதுவாக மனிதர்கள் அனைவருமே 46 குரோமோசோம் (Chromosome ) கொண்டவர்கள் தான் (குரோமோசோம் மனித செல்களில் உள்ள ஒன்றாகும் ) . நம் பாலினத்தை வரையறை செய்வது  இந்த 46 குரோமோசோம்களில் உள்ள முக்கியமான  X மற்றும் Y குரோமோசோம்கள் ஆகும் . மேற்சொன்ன குரோமோசோம்களில் தான் Gene எனப்படும் மரபணு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாலினம் – வரையறை 

            பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது என்பதை அறியும் முன்    அதற்கு காரணமான X மற்றும் Y குரோமோசோம்களை பற்றி சிறிது அறிவோம். சாதாரண மனித வளர்ச்சிக்கு X குரோமோசோம் மிக முக்கியமானது ஆகும். X குரோமோசோம் தன்னுள் சுமார் 900 முதல் 1200 மரபணுக்களை கொண்டுள்ளது. இதில் உள்ள F9 என்னும் மரபணு குருதி உரைதலுகான பொறுப்புடையது  (Responsible for blood clotting ) ஆகும்.

              COL4A5 என்னும் மற்றொரு மரபணு சாதரணமாக சிறுநீரகம் செயல்பட தேவையானது ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த X குரோமோசோமில் தான் பெண்  பண்புகளை  ( Female Phenotype ) நிர்ணயம் செய்யும் ஒரு மரபணுவும் அடங்கியுள்ளது. இப்படி X குரோமோசோம் இல்லாமல் போனால் கருமுட்டையானது (Zygote) வளராது.

X மற்றும் Y க்ரோமோசோம்கள் 

See the source image

மேற்சொன்ன X குரோமோசோமை விட Y குரோமோசோம் தோற்றத்தில் சிறிதாக காணப்படுகிறது. சுமார் 70 முதல் 300 மரபணுக்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த Y குரோமோசோமில் உள்ள பெரும்பாலான மரபணுக்கள் ஆண் பண்புகளை நிர்ணயம் செய்யவே பயன்படுகிறது.

               X குரோமோசோமை போல வேறு  மிக முக்கியமான மரபணுக்களை தன்னுள் கொண்டு இருக்கவில்லை. பொதுவாகவே பெண்ணின் 46 குரோமோசோமில் 2 X குரோமோசோம் இருக்கும் (44 + 2 X குரோமோசோம்கள் ). அதே, ஆணில் X குரோமோசோமும் Y  குரோமோசோமும் இடம் பெற்று இருக்கும் (44 + X and Y குரோமோசோம் ) .

பாலினம் எப்படி மாறுபடுகிறது ?

               மேற்சொன்னது போல X குரோமோசோம் பெண் பாலினத்தை நிர்ணயம் செய்வது, அதே Y குரோமோசோம் ஆண் பாலினத்தை நிர்ணயம் செய்வது. ஒரு குழந்தைக்கு தாயிடம் இருந்து 23 ( 22+ 1 sex determining chromosome) குரோமோசோம்களும் தந்தையிடம் இருந்து 23 (22 + 1 sex determining chromosome ) குரோமோசோம்களும் செல்கிறது.

             இயற்கையாகவே பெண்களிடம் இருந்து 22 + X குரோமோசோம் தான் காணப்படுகிறது. ஆனால், ஆண்களிடம் அவ்வாறு  அந்த பாலினத்தை நிர்ணயம் செய்யும் குரோமோசோம் X ஆகவோ அல்லது Y ஆகவோ இருக்கலாம்.

              இப்பொழுது மேற்சொன்ன 23 + 23 குரோமோசோம்கள் குழந்தைக்கு  எப்படி செல்கிறது என்று பார்க்கலாம். பெண்ணின் கருமுட்டையில் ( Zygote ) 23 குரோமோசோம்களும் ஆணின் உயிரணுவில் (Sperm)  23 குரோமோசோம்களும் இருக்கும் ( Remember both Zygote and sperm are also nothing but Cells) . 

இப்படி ஏற்கனவே பெண்ணின் கருமுட்டையில் உள்ள X குரோமோசோமுடன், ஆணின் உயிரணுவில் X குரோமொசோம் இருந்து அது சேர்கையில் அது  X X குரோமோசோம் அதாவது பெண் பாலினத்தை நிர்ணயம் செய்வதாக அமைகிறது. அதே, பெண்ணின் கருமுட்டையில் உள்ள X குரோமோசோமுடன், ஆணின் உயிரணுவில் Y குரோமோசோம் இருந்து அது சேர்கையில் அது X Y குரோமோசோம் ஆக மாறும். அதாவது ஆண் பாலினத்தை நிர்ணயம் செய்கிறது.

ஒரு குழந்தை பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ பிறப்பதற்கு காரணம் ஆண் தானே தவிர பெண் அல்ல.

பாலினம்

இது தொடர்பாக மேலும் படியுங்கள்.

தமிழ்

Student and a blogger. Contact him at [email protected]
Close Menu
%d bloggers like this: