மனித பாலினம் இத்தனை உள்ளதா?
பாலினம் என்றால் என்ன ?

மனித பாலினம் இத்தனை உள்ளதா?

Spread the love

            பாலின சமத்துவம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். இன்று பாலினம் எனப்படுவது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட பண்புகளையுடைய ஆண்கள் அல்லது பெண்கள் குழுவினரைக் குறிக்கும் சொல்லென  உலக சுகாதார அமைப்பு ( WHO ) கூறுகின்றது. ஆண்கள் அல்லது பெண்கள் என்றால் என்ன, அவர்கள் எப்படி இருக்க வேண்டும், எத்தகைய பண்புகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றி வாழ வேண்டும் போன்ற கருத்துகளை உருவாக்கி வைத்திருந்தது நமது சமூகம். அந்த வரையறையால் பாலின சமத்துவத்திற்கு பாதிப்பு நேர்ந்தது. ஆனால், சமூகத்தால் வரையிருக்கப்பட்ட பாலினம் பற்றிய  கருத்துகள் காலப்போக்கில் மாற்றத்திற்கு உட்பட்டன  என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, பாலினம் சமூக கட்டமைப்பிற்க்கும் அப்பாற்பட்டு   பிறப்புறுப்பு, தனிமனித உணர்ச்சி மற்றும் நிறப்புரி(chromosomes) அடிப்படையில்தான் பாலினம் தீர்மானம் செய்யப்படுகிறது. ஆனால், இன்னும் பலர் பாலினத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் பாலின சமத்துவத்தை  ( Gender Equality ) மறுபவர்களாக உள்ளனர். பாலினம் பற்றிய விளக்கம் தருவதோடு பாலினம் பற்றிய புரிதலையும் இந்த கட்டுரை தர முயற்சிக்கும்.

பாலினம் பலவிதம் ?

          ஆண் அல்லது பெண் என்ற இரு பாலின அம்சங்களிலும் பொருந்தாத தனிநபர்கள் அல்லது குழுக்களை நாம் மூன்றாம் பாலினம் என  கூறுகின்றோம் . நம் சமுதாயத்தை பொருத்தமட்டில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய “திருநங்கைகள்” மட்டுமே மூன்றாம் பாலினத்தை சார்ந்தவர்கள். ஆனால், இவர்களைத் தவிர்த்து சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பாலினத்தவர்கள் இருப்பதாகச் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
அவற்றில் சிலவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

பாலின சமத்துவம் 

திருநர்(Transgender)

              திருநர் என்பவர்கள் தங்களின் பாலியல் உறுப்புக்களினடிப்படையில் ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்களை திருநங்கைகள்( Transwoman) என்றும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்களைத் திருநம்பிகள் (Transman) என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பால் புதுமையினர் (Gender Queer)

                  பொது பாலினம் மற்றும் திருநர்களை தவிர்த்து மற்ற அனைத்துப் பாலினத்தவர்களும் பால் புதுமையினராக கருதப்படுகின்றனர்.

பாலிலி (Agender)

                  எந்தப் பாலினத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் (பாலினமற்றவர்கள்) பாலிலி என அழைக்கப்படுகின்றனர்.

பால் நடுநர் (Androgyny)

                ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது எந்தப் பாலினமாகவும் தம்மைக் கருதி கொள்ளாதவர்கள். ஆனால், இவர்களுக்கு பொதுவாகவே ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர்களின் தன்மைகளும் குணங்களும் இருக்கும்.

முழுனர் (Pan gender)

               அனைத்துப் பாலினம் அல்லது ஓரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலினத்தை ஏற்றுக்கொள்ளுபவர்கள்

இருனர் (Bi-gender)

              ஆண் பெண் என்ற இரு பாலினத்தவராகவும் தம்மை நினைத்துக் கொள்பவர்கள்.

திரினர் (Tri-gender)

           தம்மை மூன்று வித்தியாசமான பாலினங்களாகக் கருதி கொள்பவர்கள்.

திருனடுனர் (Neutrois)

            பாலினமற்றவர்கள். பாலிலி, இருமையின்மை பாலினம் மற்றும் பால் நகர்வோர் ஆகியோரைக் குறிப்பதாகும்.

தோற்றப் பாலினத்தவர் (Appearance gendered)

           உடல் மொழி மற்றும் வெளித்தோற்றம் (உடை, அணிகலன்கள்) அடிப்படையில் மட்டும் தம்மை மற்றொரு பாலினத்தவராக மாற்றிக் கொள்பவர்கள்

பாலினம்

இருமை நகர்வு (Binary butch)

            உடல் ரீதியாகவோ, மனோ ரீதியாகவோ மற்றும் உணர்ச்சி ரீதியாகவோ ஆண்களைப் போல் இருக்கும் பெண் அல்லது அகனளை (Lesbian) குறிப்பது.

இடைபாலினம் (Intergender)

            ஆண் மற்றும் பெண் பாலினத்திற்கு இடையே இருப்பவர்கள். முழுமையான ஆணுமில்லை. முழுமையான பெண்ணுமில்லை.

அரை பெண்டிர் (Demigirl)

            தம்மை 50 சதவீதம் பெண்ணாகவும் 50 சதவீதம் மற்றொரு பாலினமாகவும் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். இவர்கள் பிறப்பால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.

அரையாடவர் (Demiguy)

           தம்மை 50 சதவீதம் ஆணாகவும் சதவீதம் மற்றொரு பாலினமாகவும் கருதிக் கொள்பவர்கள். இவர்கள் பிறப்பால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்.

நம்பி ஈர்ப்பனள் ( Girl fags)

           திருநம்பிகள் மீது பாலின ஈர்ப்புடைய பெண்கள்.

நங்கை ஈர்ப்பனன் (Guy dykes)

          திருநங்கைகள் மீது பாலின ஈர்ப்புடைய ஆண்கள்.

பால் நகர்வோர் (Gender fluid)

          ஒரு நாள் ஆணாகவும் மற்றொரு நாள் பெண்ணாகவும் தம்மை நினைத்து கொள்பவர்கள்.

ஆணியல் பெண் (Tomboy)

          ஆண்களைப் போல் தோற்றம் மற்றும் உடல் செய்கைகளுடைய பெண்கள். இவர்கள் அகனள் (Lesbian) அல்லது ஆண் மீது பாலின ஈர்ப்புடைய பெண்ணாகவும் இருக்கலாம்

பெண்ணன் (Sissy)

            பெண்களை போல் தோற்றம் மற்றும் உடல் செய்கைகளுடைய ஆண்கள். இவர்கள் அகனன் (Gay) அல்லது பெண் மீது பாலின ஈர்ப்புடைய ஆணாகவும் இருக்கலாம்.

இருமையின்மை ஆணியல்/ இருமையின்மை பெண்ணியல் (Non-binary butch/femme)

            ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தம்மை அடையாளப்படுத்தி கொள்ள மாட்டார்கள். ஆனால், எதிர்பாலின வெளிப்பாட்டை அதிகமாக காட்டுபவர்கள். பெண் ஆண்மையாகவும்/ ஆண் பெண் குணாதிசயங்களுடன் இருப்பது.

பிற்பால் உடை அணிபவர் (Cross dresser)

இவர்கள் உடைணிவது மட்டுமே எதிர்பாலினத்தவர்களை போல் இருக்கும். இவர்களின் பாலின ஈர்ப்பிற்கும் உடையணிவதற்கும் எந்தத் தொடர்புமில்லை.


             சமூகத்தால் வரையிருக்கப்பட்ட பாலின அடையாளத்திற்கு பொருந்தாமல் தங்களின் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டு இன்றும் பல இளைஞர்கள் தத்தளிக்கின்றனர். இதற்கான காரணம் சமுதாயத்தின் மீதுள்ள பயம். பாலினம் என்பது சமூகத்தால் வரையிருக்கப்படுவதில்லை அது தனிநபரின் உடல் மற்றும் உணர்ச்சிகளை சார்ந்தது என்ற விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். இனியாவது, மூன்றாம் பாலினத்தவர்களை ஒதுக்கி வைக்காமல் சக மனிதராய் மதித்து ஏற்றுக்கொள்வோம்.


             சமூகத்தால் வரையிருக்கப்பட்ட பாலின அடையாளத்திற்கு பொருந்தாமல் தங்களின் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டு இன்றும் பல இளைஞர்கள் தத்தளிக்கின்றனர். இதற்கான காரணம் சமுதாயத்தின் மீதுள்ள பயம். பாலினம் என்பது சமூகத்தால் வரையிருக்கப்படுவதில்லை அது தனிநபரின் உடல் மற்றும் உணர்ச்சிகளை சார்ந்தது என்ற விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். இனியாவது, மூன்றாம் பாலினத்தவர்களை ஒதுக்கி வைக்காமல் சக மனிதராய் மதித்து ஏற்றுக்கொள்வோம்.

            நாள் முடிவில் யார் காதலித்தாலும் காதல் ஒன்று தானே ?

Close Menu
%d bloggers like this: