கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்
கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு

கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

Spread the love

கருப்பை புற்றுநோய்  என்பது பெண்களின் கருப்பைகளில் தோன்றும் ஒரு வகையான புற்றுநோய் ஆகும். கருப்பை  பொதுவாக கருமுட்டையையும் ( Ova ) எஸ்ட்ரோஜன் ( Estrogen ) ப்ரோஜெஸ்டெரோன் ( Progesterone ) ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த கருப்பை புற்றுநோய் பெரும்பாலும் ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க இயலாததாய் போய் மற்றபகுதிகளுக்கும் பரவி தீவிரம் அடைகிறது . துவக்கத்திலேயே இந்த கருப்பையில் புற்றுநோய் உண்டென்று அறிந்துகொண்டால் இதை குணப்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். கீமோதெரபி மற்றும் அறுவைசிகிச்சை மூலம் மட்டுமே இதை குணப்படுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 

இந்த வகை புற்றுநோயின்  தீவிரத்தை அறிந்துக்கொண்டு உலகம் முழுதும் செப்டம்பர் மாதம் கருப்பை புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் முழுதும் கருப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வது தான் இதன் இலக்காக உள்ளது . 2018-ல் மட்டும் உலகம் முழுதும் சுமார் மூன்று  லட்சம் பெண்கள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம்  ( World Cancer Reaserch Fund ).

மேலும் படியுங்கள் : முட்டை எந்த வகையில் சாரும் ?

இந்த வகை புற்றுநோயை கண்டுபிடிப்பதில் இருக்கும் முக்கியமான சிரமமே அதன் அறிகுறிகள் ஆகும். மிக குறைந்த அறிகுறிகளையோ அல்லது பொதுவான அறிகுறிகளையோ ( பொதுவான அறிகுறிகள் ஏற்படும்போது வேறு நோயாக கூட  இருக்கலாம் என்று சிலர் கருதக்கூடும் ) காட்டும் இந்த கருப்பை புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிய சிரமம் தருகிறது.

கருப்பை புற்றுநோய்
படம் : By CDC – The Centers for Disease Control and Prevention

அறிகுறிகள் 

இந்த  புற்றுநோய் தன் துவக்கக்காலத்தில் மிக குறைவான அறிகுறிகளையே காட்டும் வண்ணமாக உள்ளது . கருப்பை புற்றுநோய் தீவிரம் அடைந்த பின்னே வரும் அறிகுறிகள் ( பொதுவான அறிகுறிகள் ) மற்ற நோய்க்கான காரணமென தவறாக சில சமையம் சிலர் கருதிக்கொள்வதுண்டு.

கருப்பை புற்றுநோய் – அறிகுறிகள்

  • அடிவயிற்றில் ஏற்படும் வீக்கம் அல்லது உப்பசம் ( Swelling or Bloating )
  • உணவு உண்பதில் சிக்கல் அல்லது சிறிது உண்ட பின்னர் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ( Trouble eating or Feeling Full Quickly )
  • உடல் எடை குறைவு 
  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு 
  • அடிவயிற்றில் அல்லது இடுப்புவளையம் ( Pelvis ) சுற்றி வலி 

மேலும், இந்த அறிகுறிகளைப் பற்றி Health இணையதளம் விரிவாக விவரிக்கிறது.

மேலும் படியுங்கள் : மனித பாலினம் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது 

மருத்துவரிடம் கலந்தாலோசித்தால் 

மேற்சொன்ன அறிகுறிகள் உணவு பழக்கம் ( Diet ), உடற்பயிற்சி,  ஓய்வு ஆகியவற்றை மேற்கொண்டும் இருப்பின் கட்டாயமாக மருத்துவரிடம் கலந்தாலோசித்தால் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த அறிகுறிகள் கொண்டு கிட்டத்தட்ட 19 சதவீதம் தான் கருப்பையில் புற்றுநோய் உள்ளதென கண்டுபிடிக்க முடியும்  என்றும் மீதமுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின் துணைகொண்டே தமக்கு இந்த புற்றுநோய் உண்டா இல்லையா என்பதை கண்டறிய இயலும் என  ovarian.org கூறுகிறது.

காரணம் 

இது வரையில் இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கான முழுமையான காரணத்தை அறிய முடியவில்லை. ஆனால்,  செல்களில் ஏற்படும் தனியல்பு மாற்றம் ( Mutation ) தான் இதற்கும் காரணமென பொதுவாக கூறுகின்றனர் ( குறிப்பு : செல்களில் ஏற்படும் தன்னியல்பு மாற்றமே செல்களை பிறழ்ச்சியான செல்களாக மாற்றி ( Abnormal cells ) புற்றுநோய்க்கு வித்திடுகிறது ).

காரணிகள் 

கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சில காரணிகள் கீழே  

  • வயது : கருப்பை புற்றுநோய் எந்த வயதினருக்கும் வரலாம். ஆனால்  50 வயது முதல் 60 வயதிடையில் உள்ள பெண்களிடத்தில் பரவலாக காணப்படுகிறது.
  • மரபணு தன்னியல்பு மாற்றம் ( Gene Mutation ) : பெண்களில்  சிறிய மிகச்சில பேருக்கு  இந்த புற்றுநோய் மரபணு தன்னியல்பு மாற்றத்தாலும் ஏற்படுகிறது. Breast cancer gene 1 ( BRCA 1)  மற்றும் Breast cancer gene 2 ( BRCA 2 ) என்னும் மார்பக புற்றுநோயின் காரணிகளே கருப்பை புற்றுநோய்களுக்கும் காரணிகளாக அமைகிறது.
  • நெருங்கிய உறவில் சிலருக்கு இந்த  புற்றுநோய் இருந்தாலும் ஒருவருக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான சிறிது வாய்ப்புகள் உள்ளன.

மேலும் காரணிகளைப் பற்றி American Cancer Society கூறுகிறது.

Close Menu
%d bloggers like this: