உங்கள் நினைவு திறனை அதிகரிக்கும் எழுத்துரு
நினைவாற்றலை அதிகரிக்கும் எழுத்துரு

உங்கள் நினைவு திறனை அதிகரிக்கும் எழுத்துரு

Spread the love

ஆங்கிலத்தில் Font என்று அழைக்கப்படும் எழுத்துரு  ஒரு மொழியின் வடிவம் அல்லது முகம் போன்றது  ஆகும். காகிதத்தில் துவங்கி, அச்சுத்துறையில் இருந்து, இன்று இணையம் வரை இந்த எழுத்துருக்கள் ( Fonts) பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துருக்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப கணினி மற்றும் அச்சுப் பயன்பாட்டிற்கு மாற்றம் கண்டு வருகின்றது. இன்று புகைப்படங்கள்,நூல்கள்,இணைய கட்டுரைகள்,இணையம் சார்ந்த அனைத்திலுமேன பயன்படுத்தும்  எழுத்துரு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது எனலாம்.

              எழுத்துருக்கள் (Fonts) ஒரு மொழியை அழகாகவும் நேர்த்தியாகவும் காட்டவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், மனிதர்களின் நினைவு திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட எழுத்துரு ஒன்று இப்பொழுது வெளிவந்துள்ளது. SANS FORGETICA என்று அழைக்கப்படும் இந்த எழுத்துரு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த கட்டுரையின் முடிவில் மேல்சொன்ன எழுத்துருவை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு
Sans Forgetica எழுத்துரு 

Sans Forgetica – மாறுபட்ட எழுத்துரு 

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரைபடக்கலை மாணவர்கள் ( Graphic Design Students ), உளவியலாளர்கள் ( Psychologist ) மற்றும் இன்னும் பிற ஆராச்சியாளர்கள் Sans Forgetica என்னும் நினைவாற்றலை அதிகரிக்கும் மற்றும் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ள (Memory Retention) உதவும் எழுத்துருவை வடிவமைத்துள்ளனர். நினைவாற்றலுக்கென்றே உருவாக்கப்பட்ட உலகின்முதல் எழுத்துரு இதுவாகும்.

இடதுப் பக்கத்தில் இருந்து துவங்கும் இதன் பெரிய  எழுத்துருவின் ஒவ்வொரு சொல்லிற்கு நடுவிலும் சிறிது இடைவெளி உள்ளது. சுமார் 400 மாணவர்களை கொண்டு இந்த எழுத்துரு எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பதை சோதனை செய்யப்பட்டது. ஆய்வில் Sans Forgetica எழுத்துருவும், Arial என்னும் இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் எழுத்துருவும் ஒப்பீடு செய்யப்பட்டது.

       இந்த சோதனையின் முடிவில் Arial எழுத்துருவில் உள்ளதை விட Sans Forgetica எழுத்துருவில் உள்ளதை படித்தவர்கள் சுமார் 50% முதல் 57% வரை அதிகம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தது.

மேலும் படியுங்கள் 

Sans Forgetica எழுத்துருவிற்கு பின் இருக்கும் அறிவியல்

Sans Forgetica அறிவாற்றல் உளவியலின் (Cognitive Psychology) கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆகும்.  ஒருவர் படிப்பதை மறக்காமல் கிரகித்துக்கொள்ள இது உதவுகிறது. இலவசமாகவே கிடைக்கும் இந்த எழுத்துரு கணினி, கைப்பேசி என அனைத்திலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

      Sans forgetica எழுத்துருவில் உள்ள ஒரு வரி, வேறு எழுத்துருவில் உள்ள வரியை விட படிப்பதற்கு மிக கடினமாக இருக்கும். Desirable Difficulty என்று கூறப்படும் படிப்பதற்கு கடினமான செயலால் உங்கள் மூளை வழக்கத்தை விட மிக அதிகமாக ஒரு வரியையோ அல்லது பத்தியையோ கிரகித்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்துகின்றது. இதனாலேயே Sans Forgetica எழுத்துருவில் நீங்கள் ஒன்றை படித்தால் அதை நினைவில் வைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

      இந்த எழுத்துருவை உருவாக்குவதற்கு RMIT பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவிற்கு சுமார் 6 மாதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம் 

       இந்த Sans Forgetica எழுத்துருவை நீங்கள் கூகுள் குரோமில் நீடிப்பாக (Chrome Extension) பயன்படுத்தலாம். அல்லது இந்த இணைப்பில் அதை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் படியுங்கள் 

                The Science Way தமிழ் மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகள் சார்ந்த கட்டுரைகளை இலவசமாக வழங்குகிறது. மேலும் அதன் சேவையை மேம்படுத்த மற்றும் கட்டுரை தரம் சார்ந்த கருத்துக்கள், புதிய யோசனைகள் போன்றவற்றை [email protected] என்னும் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகிறோம். – ஆசிரியர் The Science Way

 

Close Menu
%d bloggers like this: